Home
Mobile

OnePlus Nord 5 ஸ்மார்ட்போனின் Camera சும்மா தெறிக்க விடுதே.. முன்னாடி, பின்னாடி 50MP கேமரா.. என்ன விலை?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் வருகிற ஜூலை 8 ஆம் தேதி அன்று 2 புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது: ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 (OnePlus Nord CE5). அறிமுகத்திற்கு முன்னதாக, ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

முன்னதாக ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Snapdragon 8s Gen 3 SoC) சிப்செட் இடம்பெறும் என்பதை ஒன்பிளஸ் நிறுவனம் உறுதிப்படுத்தி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் ​ கேமரா செட்டப் குறித்த அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

OnePlus Nord 5 ஸ்மார்ட்போனின் Camera சும்மா தெறிக்க விடுதே!

ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் கேமரா விவரங்கள்: இது டூயல் ரியர் கேமரா யூனிட் உடன் வரும் என்பதையும், அதில் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 ப்ரைமரி சென்சார் மற்றும் 8-மெகாபிக்சல் 116-டிகிரி அல்ட்ரா-வைட் ஷூட்டர் இடம்பெறும் என்பதையும் ஒன்பிளஸ் ஒன்பிளஸ் நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் உறுதிப்படுத்தியுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 50-மெகாபிக்சல் சாம்சங் JN5 சென்சாரை கொண்ட செல்பீ கேமரா இருக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டுமே 60fps இல் 4K வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கும். மேலும் ஸ்மார்ட்போன் லைவ் போட்டோ (LivePhoto) அம்சத்தையும் ஆதரிக்கும்.

ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? முன்னரே குறிப்பிட்டபடி இது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட்டை பெறுவதும் , இது LPDDR5X ரேம்-ஐ ஆதரிப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது 7,300sq mm விசி கூலிங் சேம்பரியும்பேக் செய்யும். இதன்மூலம் ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனால் 144fps வரையிலான கேமிங்கை வழங்க முடியும் என்று கூறப்படுகிறது.

மேலும் ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது ஐபி65 தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு கட்டமைப்பு, 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவுடன் 5200mAh பேட்டரி மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.83-இன்ச் FHD+ (1272 x 2800 பிக்சல்ஸ்) AMOLED டிஸ்ப்ளே ஆகிய அம்சங்களையும் கொண்டிருக்காலம்

இந்த ஸ்மார்ட்போன் 8GB மற்றும் 12GB ரேம் உடனான 256GB மற்றும் 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம். இது Dry Ice, Marble Sands மற்றும் Phantom Grey ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் ரூ.30000-ஐ சுற்றி இருக்கலாம்.

OnePlus Nord 5 ஸ்மார்ட்போனின் Camera சும்மா தெறிக்க விடுதே!

ஒன்பிளஸ்-ன் ஜூலை 8 வெளியீட்டு நிகழ்வில் வேறு என்னென்ன அறிமுகமாகும்? முதலில் - இந்நிகழ்வில் ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரீஸின் கீழ் 2 ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆடியோ பிரிவின் கீழ் ஒன்பிளஸ் பட்ஸ் 4 (OnePlus Buds 4) என மொத்தம் 3 புதிய அறிமுகங்கள் மட்டுமே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் மேலும் 2 புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டது.

ஜூலை 8 ஆம் தேதி நிகழ்வின் போது நடக்கும் நிகழ்வின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு டேப்லெட் ஆக ஒன்பிளஸ் பேட் லைட் (OnePlus Pad Lite) மற்றும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் வாட்ச் ஆக ஒன்பிளஸ் வாட்ச் 3 43மிமீ (OnePlus Watch 3 43mm) ஆகியவைகளையும் அறிமுகப்படுத்துவதாக ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus Nord 5 Rear and Front Camera Specifications Confirmed Ahead Launch on July 8
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X