Home
Mobile

மார்க்கெட்டே திணறப்போகுது.. சோனி கேமரா.. 7100mAh பேட்டரி.. வருகிறது புதிய OnePlus போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, வரும் ஜூன் மாதம் இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 5 போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த புதிய ஒன்பிளஸ் போனின் விலை மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது.

அதன்படி ரூ.30,000 பட்ஜெட்டில் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 5 போன் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என் கூறப்படுகிறது. குறிப்பாக டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன்.

மார்க்கெட்டே திணறப்போகுது.. வருகிறது புதிய OnePlus போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நோர்ட் 5 அம்சங்கள் (OnePlus Nord 5 specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட் (MediaTek's Dimensity 8350 chipset) உடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அட்ரினோ கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் பிளாட் ஒஎல்இடி (flat OLED) டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 5 போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

அதேபோல் OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி எல்ஒய்டி-600 (Sony LYT-600) கேமரா + 8எம்பி சோனி ஐஎம்எக்ஸ்355 ( Sony IMX355) அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் கேமரா அமைப்புடன் ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor) வசதி இந்த ஒன்பிளஸ் போனில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant)ஆதரவுடன் இந்த போன் வெளிவரும் எனக் கூறப்படுகிறது.

7100mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அதேபோல் மேம்பட்ட ஏஐ (AI) அம்சங்கள் இந்த ஒன்பிளஸ் போனில் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 5 Price in India, Launch Timeline, specifications: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X