Home
Mobile

2025 மே மாதம் களை கட்டுதே.. 1 இல்ல 2 இல்ல.. 3 புதிய OnePlus போன்கள்.. 2 பட்ஜெட், 1 பிரீமியம் மாடல்!

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் பிளாக்ஷிப் ஒன்பிளஸ் 13 சீரீஸின் கீழ் அனைத்து மாடல்களையும் அறிமுகம் செய்த கையோடு, அதன் பட்ஜெட் விலை நோர்ட் சீரீஸின் கீழ் அடுத்தடுத்த மடல்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் ஒன்பிளஸ் 13டி மாடலை சீனாவில் அறிமுகம் செய்திருந்தது. இது ஒன்பிளஸ் 13எஸ் ஆக இந்திய சந்தைக்கு வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன: அவைகள் ஒன்பிளஸ் நோர்ட் 5 மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 மாடல்கள் ஆகும். ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 மாடல் ஆனது பிஐஎஸ் வலைத்தளத்தில் காணப்பட்டு உள்ளதாக 91 மொபைல்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆக இது எப்போது வேண்டுமானாலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்பதை குறிக்கிறது.

2025 மே மாதம் களை கட்டுதே.. 1 இல்ல 2 இல்ல.. 3 புதிய OnePlus போன்கள்!

மறுகையில் உள்ள ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக இருக்கலாம். 91 மொபைல்ஸ் வலைதளமானது ஒரு குறிப்பிடத்தக்க மூலத்திலிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஒன்பிளஸ் நோர்ட் 5 இந்திய விலை வரம்பு மற்றும் முக்கிய அம்சங்களை பகிர்ந்துள்ளது

இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 5 என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? டிப்ஸ்டர் டெபயன் ராய் கருத்துப்படி, ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் சுமார் ரூ.30,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் நோர்ட் 4 ஆனது ரூ.29,999 க்கு அறிமுகமானது. ஒன்பிளஸ் நோர்ட் 4 மறுபெயரிடப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் 3வி ஆகும், எனவே ஒன்பிளஸ் நோர்ட் 5 ஆனது மறுபெயரிடப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் 5வி ஆக இருக்கவும் வாய்ப்புள்ளது.

2025 மே மாதம் களை கட்டுதே.. 1 இல்ல 2 இல்ல.. 3 புதிய OnePlus போன்கள்!

ஒன்பிளஸ் நோர்ட் 5 என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- பிளாட் அமோலெட் டிஸ்பிளே
- இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- மீடியாடெக் டைமன்சிட்டி 9400இ சிப்செட்
- OIS ஆதரவுடன் 50MP ப்ரைமரி கேமரா
- 8MP அல்ட்ராவைடு ஆங்கிள் கேமரா
- 16MP செல்பீ கேமரா
- 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7,000mAh பேட்டரி

ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2150 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.74-இன்ச் 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ProXDR மற்றும் AquaTouch தொழில்நுட்பங்களையும் பேக் செய்கிறது. இதன்கீழ் உங்கள் விரல்கள் ஈரமாக இருந்தாலும் கூட இதன் டிஸ்பிளே ரெஸ்பான்சிவ் ஆக இருக்கும்.

2025 மே மாதம் களை கட்டுதே.. 1 இல்ல 2 இல்ல.. 3 புதிய OnePlus போன்கள்!

ப்ராசஸரை பொறுத்தவரை: இது அட்ரெனோ 732 ஜிபியு (Adreno 732 GPU) உடனான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 SoC) கொண்டு இயங்குகிறது. இந்த சிப்செட் ஸ்னாப்டிராகன் 7ஜென் 3-ஐ விட 65 சதவீதம் வேகமான சிபியு, 130 சதவீதம் வேகமான ஜிபியு-வை வழங்கும் என்று கூறப்படுகிறது.

ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை: இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி வரையிலான RAM மற்றும் 256ஜிபி வரையிலான UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 128ஜிபி ஆப்ஷனில் UFS 3.1 ஸ்டோரேஜ் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கேமராக்களை பொறுத்தவரை: இது ஓஐஎஸ் (OIS) மற்றும் இஐஎஸ் (EIS) ஆதரவு கொண்ட 50 எம்பி Sony LYT-600 ப்ரைமரி கேமரா + 112 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவை வழங்கும் 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை 16எம்பி செல்பீ கேமரா பூர்த்தி செய்யும். பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 100W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 5,500mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 13டி முக்கிய அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு
- 2640 x 1216 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 800 நிட்ஸ் வரையிலான டிபிக்கல் ப்ரைட்னஸ்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- டால்பி விஷன்
- ஒப்போ கிரிஸ்டல் ஷீல்ட் கிளாஸ் ப்ரொடெக்ஷன்
- 6.32-இன்ச் 1.5கே 8டி எல்டிபிஓ அமோலெட் டிஸ்பிளே

- 900மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 830 ஜிபியு உடனான 4.32ஜிகாஹெர்ட்ஸ் வரையிலான ஆக்டாகோரி ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம்
- 256ஜிபி / 512ஜிபி/ 1டிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் 12ஜிபி / 16ஜிபி LPDDR5X ரேம்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 15

2025 மே மாதம் களை கட்டுதே.. 1 இல்ல 2 இல்ல.. 3 புதிய OnePlus போன்கள்!

- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 1/1.56 இன்ச் IMX906 சென்சார், எப்/1.8 அபெக்ஷர், OIS உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா
- 2x டெலிஃபோட்டோ கேமரா, எப்/2.0 அபெர்க்ஷர் OIS, 4k 60fps வீடியோ ரெக்கார்ட் உடனான 50எம்பி இரண்டாம் நிலை கேமரா
- எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 16எம்பி செல்பீ கேமரா (1080p 30 fps வரை வீடியோ ரெக்கார்டிங்)

- 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6260mAh பேட்டரி
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இன்ப்ர ரெட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி65 ரேட்டிங்

- யூஎஸ்பி டைப்-சி ஆடியோ
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
- 4 மைக்ரோஃபோன்கள்
- டால்பி அட்மாஸ்
- அளவீட்டில் 150.81×71.70×8.15மிமீ
- எடையில் 185 கிராம்.

ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் சீன விலை விவரங்கள்: இது மார்னிங் மிஸ்ட் கிரே, ஹார்ட்-த்ரே பிங்க் மற்றும் கிளவுடி இங்க் பிளாக் ஆகிய கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.39,805 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.42,150 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.44,490 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.46,835 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடைசியாக உள்ள ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.52,690 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 5 OnePlus Nord CE 5 OnePlus 13s India Launch Price Specs All you Need to Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X