இன்ப அதிர்ச்சினா இப்படி இருக்கனும்.. 7000mAh பேட்டரி உடன் 2 புதிய OnePlus பட்ஜெட் போன்கள்!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் காம்பாக்ட் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 13எஸ் வருகிற ஜூன் 5 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது. இது ரூ.50,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ரூ.25,000 - ரூ.30,000 பட்ஜெட்டில் மேலும் 2 புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களும் விரைவில் அறிமுமாகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
அதென்ன மாடல்கள்? அவைகள் ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகும். இதன்கீழ் (ஆரம்பத்தில்) ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 (OnePlus Nord CE 5) ஆகிய 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல்கள் சீனாவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ரா (OnePlus Ace 5 Ultra) மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேஸிங் (OnePlus Ace 5 Racing) மாடல்களின் "மறுபெயரிடப்பட்ட" வெர்ஷன்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது சீனாவில் - முதலில் ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ரா மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேஸிங் அறிமுகமாகும். இந்தியாவில் - பின்னர் ஒன்பிளஸ் நோர்ட் 5 மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 மாடல்களாக அறிமுகம் செய்யப்படும். குறிப்பிடத்தக்க வகையில் ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ரா மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேஸிங் அடுத்த வாரம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இருப்பினும் (ஜூன் மாதம் ஒன்பிளஸ் 13எஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளதால்), ஒன்பிளஸ் நோர்ட் 5 மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 மாடல்கள் ஜூலை 2025 இல் தான் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு ஸ்மார்ட்போன்களிலும் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? என்ன விலைக்கு வரும்? என்கிற விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்.
ஆன்லைனில் லீக் ஆன ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ரா மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேஸிங் ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்களின் வழியாக - இரண்டும் நேர்த்தியான, பிளாட் ஆன கிளாஸ் பினிஷ் உடன் ஒரே மாதிரியான ரியர் வடிவமைப்பை கொண்டுள்ளன. ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ராவின் சிறப்பம்சங்களை பற்றி பேசினால், இது 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.83-இன்ச் பிளாட் LTPS OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மறுகையில் உள்ள ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேசிங் ஸ்மார்ட்போனானது 1080பி ரெசல்யூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.77-இன்ச் OLED பேனலை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 9400+ சிப்செட் மூலம் இயக்கப்படும், 16 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 1 டிபி UFS 4.0 ஸ்டோரேஜ், 7000mAh பேட்டரி மற்றும் 100W பாஸ்ட் சார்ஜிங் ஆகியவற்றை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது
மறுகையில் உள்ள ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேசிங் ஸ்மார்ட்போன் ஆனது டைமன்சிட்டி 9400இ சிப்செட், 50 எம்பி ப்ரைமரி கேமரா, 16 எம்பி செல்பீ கேமரா, 7000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 80W பாஸ்ட் சார்ஜிங் ஆகியவற்றை கொண்டிருக்கலாம். இதே மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் போது நோர்ட் சிஇ 5 மாடல் டைமன்சிட்டி 8350 சிப்செட்டுக்கு மாறும்.
இதேபோல ஒன்பிளஸ் நோர்ட் 5 மாடலிலும் அதன் விலையுடன் ஒத்துப்போகும் சிப்செட் பேக் செய்யப்படும். அதாவது 2 மாடல்களுமே இந்திய சந்தைக்கு ஏற்ற விலை நிர்ணயத்துடன் ஒற்றுப்போகும் சிப்செட்களுடன் அறிமுகம் செய்யப்படும். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை இவ்விரு ஸ்மார்ட்போன்களும் ரூ.25,000 - ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








