Home
Mobile

மார்க்கெட்டே மிரள போகுது.. சோனி கேமரா.. 7100mAh பேட்டரி.. வருகிறது புதிய OnePlus போன்கள்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 (OnePlus Nord CE 5) ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதி ஆன்லைனில் கசிந்துள்ளது. அதாவது டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் வெளியிட்ட தகவலின்படி, ஜூலை 8-ம் தேதி இந்த இரண்டு ஒன்பிளஸ் போன்களும் உலக சந்தையில் அறிமுகமாகும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் ஒன்பிளஸ் நிறுவனம் இன்னும் ஒன்பிளஸ் நோர்ட் 5 மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 போன்களின் அதிகாரப்பூர்வமாக அறிமுக தேதியை இன்னும் வெளியிடவில்லை. மேலும் இந்த இரண்டு ஒன்பிளஸ் போன்களின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

மார்க்கெட்டே மிரள போகுது.. வருகிறது புதிய OnePlus போன்கள்.. எந்த மாடல்

ஒன்பிளஸ் நோர்ட் 5 அம்சங்கள் (OnePlus Nord 5 specifications): மீடியாடெக் டைமக்சிட்டி 9400இ (MediaTek Dimensity 9400e) சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 7000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் வெளிவரும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W சார்ஜிங் வசதியும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் எனறே 16எம்பி கேமரா இதில் உள்ளது. தற்போது இந்த ஒன்பிளஸ் நோர்ட் 5ஜி போன் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விலையில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். பின்பு இந்த ஒன்பிளஸ் நோர்ட் 5 போன் ஆனது ரூ.30,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 அம்சங்கள் (OnePlus Nord CE 5 specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 8350 (MediaTek Dimensity 8350) சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

50எம்பி சோனி எல்இடி600 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக 7100mAh பேட்டரி வசதியுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 5 Nord CE 5 global release date leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X