இதுக்குனே வாங்குவாங்களே.. இந்தியாவிற்கான OnePlus Nord 5, Nord CE 5 மாடலில் இடம்பெறும் ஸ்பெஷல் அம்சம்!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அடுத்த மாதம் அதன் ஒரு மிகப்பெரிய வெளியீட்டு நிகழ்வை நடத்த உள்ளது. ஒன்பிளஸ் சம்மர் லான்ச் ஈவென்ட் (OnePlus Summer Launch Event) என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு 2025 ஜூலை 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிகழ்வின் முக்கிய அறிமுகமாக ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இருக்கும். ஒன்பிளஸ் நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த மிட்-ரேன்ஜ சீரிஸின் கீழ் ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 (OnePlus Nord CE5) என 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இதற்கிடையில் ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் (Android Headlines) வழியாக கிடைத்துள்ள புதிய அறிக்கையானது, வரவிருக்கும் இரண்டு ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் அனைத்து முக்கிய அம்சங்களையும் மற்றும் கலர் ஆப்ஷன்களையும் வெளிப்படுத்தி உள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் (எதிர்பார்க்கப்படும்) அம்சங்கள், கலர் ஆப்ஷன்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2800 x 1272 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் உடனான 6.83-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்படுகிறது.

சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Snapdragon 8s Gen 3) சிப்செட் மூலம் இயக்கப்படலாம். இது 8ஜிபி அல்லது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி அல்லது 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம்.
கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் ஆகியவைகளை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யலாம். முன்பக்கத்தில் இது 50 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டரை கொண்டிருக்கலாம்.

பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் 80W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5200mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை இது ட்ரை ஐஸ் (Dry Ice), மார்பில் சேன்ட்ஸ் (Marble Sands) மற்றும் பாண்டாம் க்ரே (Phantom Gray) ஆகிய 3 கலர்களில் வெளியாகலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் (எதிர்பார்க்கப்படும்) அம்சங்கள், கலர் ஆப்ஷன்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2392 x 1080 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் உடனான சற்றே சிறிய 6.77-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்படுகிறது.
சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 8350 (MediaTek Dimensity 8350) சிப்செட் மூலம் இயக்கப்படலாம். இது 8ஜிபி மற்றும் 128ஜிபி அல்லது 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம்.
கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் ஆகியவைகளை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யலாம். முன்பக்கத்தில் இது 16 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டரை கொண்டிருக்கலாம்
பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் 80W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5200mAh பேட்டரியை கொண்டிருக்கலாம். கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை இது பிளாக் இன்ஃபினிட்டி (Black Infinity) மற்றும் மார்பிள் மிஸ்ட் (Marble Mist) ஆகிய 2கலர்களில் வெளியாகலாம்
மேற்கண்ட அம்சங்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கானவை என்றும் கூறப்படுகிறது. இந்தியா போன்ற பிற பிராந்தியங்களில் ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது சுமார் 6,600mAh திறன் கொண்ட பெரிய பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் ஆனது 7100mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்திய வேரியண்ட்களில் ஸ்பெஷல் ஆன பேட்டரி கெப்பாசிட்டி இடம்பெறலாம்!


Click it and Unblock the Notifications