வெயிட் பண்றவங்க புத்திசாலி! ரூ.50000 க்கு OnePlus 13s மாடல் நீ போ.. ரூ.25000 க்கு OnePlus Nord 5 மாடல் நீ வா!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம், ரூ.50,000 பட்ஜெட்டில் அதன் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த வேகத்தில்.. பட்ஜெட் வாசிகள் மத்தியில் மிகவும் பிரபலமான நோர்ட் சீரீஸின் கீழ் 2 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அவைகள் ஒன்பிளஸ் நோர்ட் 5 மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 மாடல்கள் ஆகும்.
வருகிற ஜூன் 5 ஆம் தேதி ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி, அது விற்பனைக்கு வந்த பின்னர், ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில்.. ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரிஸ் குறித்த முக்கிய அப்டேட் தி டெக் அவுட்லுக் (TheTechOutlook) வழியாக கிடைத்துள்ளது.

தி டெக் அவுட்லுக்கின்படி, ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஆகிய இரண்டும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஒன்பிளஸ் ஏஸ் 5 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் காணப்படும் அதே டிஸைனுடன் அறிமுகம் செய்யப்படலாம். அதாவது ஒன்பிளஸ் நோர்ட் 5 ஆனது ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ரா (OnePlus Ace 5 Ultra) போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும். அதேபோல ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஆனது ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேசிங் எடிஷனின் வடிவமைப்பை பிரதிபலிக்கக்கூடும்.
இது உண்மையாகும் பட்சத்தில், ஒன்பிளஸ் நோர்ட் 5 மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன்களில் எல்இடி ஃபிளாஷ் யூனிட் உடனான ஒரு ஓவல் வடிவ கேமரா செட்டப் இடம்பெறும். அதாவது பழைய ஒன்பிளஸ் போன்களில் நாம் கண்ட கேமரா டிசைன், புதிய ஸ்மார்ட்போன்களில் திரும்ப இடம்பெறவுள்ளது.
இவ்விரு ஸ்மார்ட்போன்களின் ஒட்டுமொத்த வடிவமைப்பும் பழைய மாடல்களில் உள்ளதை போலவே இருந்தாலும் நோர்ட் 5 மற்றும் நோர்ட் சிஇ 5 ஆகியவைகள் மிகவும் நேர்த்தியான தோற்றத்தை கொண்டிருக்கலாம். அதாவது நோர்ட் 5 சீரிஸில் ஒரு ஆக்ஷன் பட்டன் மற்றும் ஐஆர் பிளாஸ்டர்
இடம்பெறலாம்.
இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரீஸ் எப்போது அறிமுகம் ஆகும்? சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 5 சீரீஸ் எப்போது அறிமுகம் ஆகிறது? ஒன்பிளஸ் நிறுவனம் ஜூலை 2025 வாக்கில் நோர்ட் 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம். ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ரா மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேசிங் எடிஷன் ஆகிய 2 ஸ்மார்ட்போன்களும் மே 27, 2025 அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ரா மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேஸிங் எடிஷனில் என்னென்னெ அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஆன்லைனில் லீக் ஆன ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ரா மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேஸிங் எடிஷன் ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்களின் வழியாக - இரண்டும் நேர்த்தியான, பிளாட் ஆன கிளாஸ் பினிஷ் உடன் ஒரே மாதிரியான ரியர் வடிவமைப்பை கொண்டுள்ளன.
ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ராவின் சிறப்பம்சங்களை பற்றி பேசினால், இது 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.83-இன்ச் பிளாட் LTPS OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மறுகையில் உள்ள ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேசிங் ஸ்மார்ட்போனானது 1080பி ரெசல்யூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.77-இன்ச் OLED பேனலை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 9400+ சிப்செட் மூலம் இயக்கப்படும், 16 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 1 டிபி UFS 4.0 ஸ்டோரேஜ், 7000mAh பேட்டரி மற்றும் 100W பாஸ்ட் சார்ஜிங் ஆகியவற்றை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. மறுகையில் உள்ள ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேசிங் ஸ்மார்ட்போன் ஆனது டைமன்சிட்டி 9400இ சிப்செட், 50 எம்பி ப்ரைமரி கேமரா, 16 எம்பி செல்பீ கேமரா, 7000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 80W பாஸ்ட் சார்ஜிங் ஆகியவற்றை கொண்டிருக்கலாம். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை இவ்விரு ஸ்மார்ட்போன்களும் ரூ.25,000 - ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








