ஜோடியாக வரும் OnePlus Nord 5, OnePlus Nord CE 5.. இந்திய அறிமுக தேதி அறிவிப்பு.. அதுவும் அல்டிமேட் விலையில்!
காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 13எஸ் மாடலுக்கு பிறகு, ஒன்பிளஸ் நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள் ஆன ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரிஸின் இந்திய அறிமுக தேதி (OnePlus Nord 5 Series India Launch Date) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்த்தது போலவே ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரிஸின் கீழ் ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 (OnePlus Nord CE5) என மொத்தம் 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவைகள் வருகிற 2025 ஜூலை 8 ஆம் தேதியன்று மதியம் 2 மணிக்கு (இந்திய நேரப்படி) அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இவ்விரு ஸ்மார்ட்போன்களுடன் ஒன்பிளஸ் பட்ஸ் 4 (OnePlus Buds 4) அறிமுகம் செய்யப்படும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன? இது ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் சிப்செட்களை கொண்டு நோர்ட் சீரீஸின் கீழ் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் 4என்எம் ஆர்கிடெக்ச்சர் மற்றும் பிளாக்ஷிப் க்ரையோ சிபியு உடன் கூடிய அதிநவீன ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 மொபைல் பிளாட்பார்ம் கொண்டு இயக்கப்படும்.
மேலும் இது எல்பிடிஆர்5எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டணி சிறப்பான கேமிங் அனுபவத்தை வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். கூடவே உச்சக்கட்ட செயல்திறனை பராமரிக்க, ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது 7,300 mm² வெப்பச்சிதறல் மேற்பரப்பு பகுதி (Heat dissipation surface area) உடனான க்ரையோ வெலாசிட்டி விசி கூலிங்கையும் (Cryo-Velocity VC cooling) கொண்டிருக்கும்.
மேலும் ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனானது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனை போன்ற பிளாக்ஷிப்-கிரேட் கிராஃபீன் தெர்மல்ஸ் ஐடென்டிக்கல் உடன் 1,800W/m-K செயல்திறனை வழங்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது இந்திய மார்க்கெட்டில் ஒரு நல்ல மிட்-ரேன்ஜ் கேமிங் ஸ்மார்ட்போனை தேடுபவர்களை குறிவைத்து களமிறங்குகிறது.
ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்க்கலாம்? இது 1.5கே ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.74-இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி (OIS) ப்ரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யலாம்.
முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம். கடைசியாக இது 100W வயர்டு சார்ஜிங் ஆதரவு உடனான 7000mAh பேட்டரியை பேக் செய்யலாம். மறுகையில் உள்ள ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போனின் ஆனது ஃபுல் எச்டி ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட் (MediaTek Dimensity 8350) கொண்டு இயக்கப்படலாம்
கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி (OIS) ப்ரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யலாம். முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம். கடைசியாக இது 100W வயர்டு சார்ஜிங் ஆதரவு உடனான 7100mAh பேட்டரியை பேக் செய்யலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் 5 மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? சரியான விலை நிர்ணயம் ஜூலை 8 ஆம் தேதி நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் அறிவிக்கப்படும். எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.35,000 க்கும் குறைவாகவும், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 ஸ்மார்ட்போனானது சுமார் ரூ.25,000 அல்லது அதற்கு சற்று அதிகமான விலைக்கும் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








