Home
Mobile

பொசுக்குனு ரேட் கட்.. ரூ.3,502 கம்மியா வருது.. SONY கேமரா.. 100W சார்ஜிங்.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் பிரியர்களை இனிமேல் கையில் பிடிக்க முடியாது என்று சொல்லும்படியான விலை குறைப்பில் சோனி சென்சார் கேமரா, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 5500mAh பேட்டரி, 256 ஜிபி மெமரி போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களை கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) போனானது கிடைக்கிறது. மெட்டல் பாடியில் அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கும் இந்த நோர்ட் மாடலுக்கு கிடைக்கும் விலை குறைப்பு மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் வரும் ஜூலை 8ஆம் தேதியில் ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 (OnePlus Nord CE5) ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதனால், முந்தைய மாடல்களானது, விலை குறைப்பில் கிடைக்க தொடங்கிவிட்டன. இப்போது, ஒன்பிளஸ் நோர்ட் 4 போனுக்கு ரூ.3,502 விலை குறைப்பு கிடைக்கிறது.

பொசுக்குனு ரேட் கட்.. ரூ.3,502 கம்மியா வருது.. SONY கேமரா.. எந்த போன்?

ஒன்பிளஸ் நோர்ட் 4 புது விலை (OnePlus Nord 4 New Price): இந்த நோர்ட் போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கே இப்போது விலை குறைப்பு கிடைக்கிறது. மற்ற மாடல்களுக்கு வரும் நாட்களில் எதிர்பார்க்கலாம். இந்த 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் மார்கெட் விலை ரூ.32,999ஆக இருக்கிறது. ஆனால், அமேசான் தளத்தில் ரூ.29,497 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

ஆகவே, ரூ.3,502 நேரடி விலை குறைப்பில் வாங்கி கொள்ளலாம். மேலும், பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ஈஎம்ஐ டிஸ்கவுண்ட் அந்தந்த பேங்க் கார்டுகளுக்கு ஏற்ப வழக்கம் போல கிடைக்கின்றன. இந்த ஒன்பிளஸ் நோர்ட் 4 மாடலுக்கு ரூ.28,022 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. இப்போது, கேமரா, டிஸ்பிளே, பேட்டரி மற்றும் சிப்செட் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் 4 அம்சங்கள் (OnePlus Nord 4 Specifications): இந்த நோர்ட் போனில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் செட்டப் கிடைக்கிறது. மிட்-ரேஞ்ச் மாடலாக இருப்பதால், பிரீமியம் சென்சார்கள் கிடை்ககின்றன.

ஆகவே, சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சாரானது, மெயின் கேமராவிலும், சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாரானது அல்ட்ரா வைடு கேமராவிலும் கிடைக்கிறது. இதுபோக 4K ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த ஷூட்டரில் சாம்சங் எஸ்கே3பி9 (Samsung S5K3P9) சென்சார் பேக் செய்யப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஒருவட பழைய மாடலாக இருப்பதால், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 7பிளஸ் ஜென் 3 (Octa Core 4nm Snapdragon 7+ Gen 3) சிப்செட் கிடைக்கிறது. அதேபோல ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 (Oxygen OS 14) மட்டுமே எதிர்பார்க்கலாம். 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மிரளவிடும்படி கிடைக்கிறது.

இதற்கு 5500mAh பேட்டரி வருகிறது. ஆகவே, பேக்கப் சொல்லிக்கொள்ளும்படி கிடைக்கும். 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொண்ட 6.74 இன்ச் (2772 x 1240 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. மெர்குரியல் சில்வர் (Mercurial Silver), ஒயாசிஸ் கிரீன் (Oasis Green) மற்றும் அப்சிடியன் மிட்நைட் (Obsidian Midnight) கலர்களில் ஆர்டர் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 4 With 8GB RAM Gets Price Drop Ahead Of OnePlus Nord 5 Launch Check New Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X