Home
Mobile

OnePlus போட்ட போடு.. ரூ.5001 ஆபர்ல SONY கேமரா.. 100W சார்ஜிங்.. 5500mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த போன்?

அமேசான் (Amazon) தளத்தில் நடக்கும் ஒன்பிளஸ் கம்யூனிட்டி விற்பனையில் (OnePlus Community Sale) ரூ.4,500 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.501 விலை குறைப்பு போக பட்ஜெட் விலையில் ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) போன் கிடைக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 5500mAh பேட்டரி, அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா போன்ற பிரீமியம் பீச்சர்களை பட்ஜெட்டில் கொடுக்கும் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 4 போனின் விலை மற்றும் பீச்சர் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் 4 அமேசான் விற்பனை (OnePlus Nord 4 Amazon Sale): இந்த நோர்ட் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.29,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.32,999ஆகவும் இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.35,999ஆக இருக்கிறது.

OnePlus போட்ட போடு.. ரூ.5001 ஆபர்ல SONY கேமரா.. 100W சார்ஜிங் மாடல்!

இப்போது, அமேசான் தளத்தில் ரூ.501 விலை குறைப்பு போக ரூ.29,498 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலை குறைப்பு மட்டுமல்லாமல், ரூ.4,500 பேங்க் டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்து கொள்ளலாம். ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.5,001 கம்மியான விலைக்கு 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டை வாங்கலாம்.

மெட்டாலிக் பாடியில் பிரீமியம் குவாலிட்டி கொடுக்கிறது. அதேபோல டூயல் ஷேட் டிசைனில் மெர்குரியல் சில்வர் (Mercurial Silver), அப்சிடியன் மிட்நைட் (Obsidian Midnight) மற்றும் ஒயாசிஸ் கிரீன் (Oasis Green) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. ரூ.30,000 பட்ஜெட்டில் வெளியானதால், 4 ஜெனரேஷன் ஓஎஸ் மற்றும் 6 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன.

ஒன்பிளஸ் நோர்ட் 4 அம்சங்கள் (OnePlus Nord 4 Specifications): இந்த ஒன்பிளஸ் போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 (Oxygen OS 14) கிடைக்கிறது. மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கும்படியான 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7பிளஸ் ஜென் 3 (4nm Octa Core Snapdragon 7+ Gen 3) சிப்செட் & அட்ரினோ 732 ஜிபியு (Adreno 732 GPU) வருகிறது.

OnePlus போட்ட போடு.. ரூ.5001 ஆபர்ல SONY கேமரா.. 100W சார்ஜிங் மாடல்!

6.74 இன்ச் (2772 x 1240 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. மேலும், வழக்கமாக கிடைக்கும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 450 பிபிஐ பிக்சன் டென்சிட்டி, எச்டிஆர்10பிளஸ் (HDR10+) வருகிறது. இதுவொரு அக்வா டச் (Aqua Touch) டிஸ்பிளே மாடலாகும்.

இதுபோக அல்ட்ரா எச்டிஆர், ப்ரோஎக்ஸ்டிஆர் போன்ற டிஸ்பிளே பீச்சர்களையும் கொடுக்கிறது. பேட்டரி ஹெல்த் என்ஜின் மற்றும் 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி கிடைக்கிறது. ஓஐஎஸ், ஈஐஎஸ், பிடிஏஎப், பிக்சல் போகஸ் சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இதில் சோனி எல்ஒய்டி 600 சென்சார் வருகிறது.

இந்த ஒன்பிளஸ் நோர்ட் 4 போனின் 8 எம்பி அல்ட்ரா வைடில் சோனி ஐஎம்எக்ஸ்355 சென்சார் உள்ளது. 20X ஜூம், மல்டி போகஸ், 4K ரெக்கார்டிங் கிடைக்கிறது. சாம்சங் சென்சாருடன் 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர், இன்பிராரெட் சென்சார், டைப்-சி ஆடியோ போன்ற மற்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களும் கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 4 With 8GB RAM Available Under Rs 25000 in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X