ஜூலை 16 வரை எந்த போனும் வாங்காதீங்க.. சோனி கேமரா.. இந்தியாவுக்கு வரும் OnePlus போன்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) போனின் அறிமுக தேதி வெளியாகி உள்ளது. அதன்படி இந்த புதிய போன் ஆனது வரும் ஜூலை 16-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒஎல்இடி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் அறிமுகம் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஒன்பிளஸ் நோர்ட்4 போனின் விலை மற்றும் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் 4 அம்சங்கள் (OnePlus Nord 4 specifications): 6.74-இன்ச் ஒஎல்இடி Tianma U8+ டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன். மேலும் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2150 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. எனவே இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 (Qualcomm Snapdragon 7+ Gen 3) சிப்செட் வசதியுடன் ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட் வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் இந்தியாவில் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு 3 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.
OISஆதரவு கொண்ட 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் 4 போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
அதேபோல் 5500எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (100W charging) வசதியும் உள்ளது.

குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போன் ஆனது இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5ஜி (5G), வைஃபை 6 (Wi-Fi 6), புளூடூத் 5.4 (bluetooth 5.4), என்எப்சி (NFC), ஜிபிஎஸ் (Gps), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போன் ரூ.25,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த போன்.


Click it and Unblock the Notifications








