அடுத்த மாதம் உறுதி.. 100W சார்ஜிங், 512GB மெமரி.. சோனி கேமரா.. இந்தியாவுக்கு வரும் OnePlus போன்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) போனின் இந்திய அறிமுகம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போன் ஸ்னாப்டிராகன் சிப்செட், 16ஜிபி ரேம், அமோலெட் டிஸ்பிளே, 5ஜி ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்போது இந்த போனின் அம்சங்கள் மற்றும் அறிமுகம் குறித்து தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் 4 அம்சங்கள் (OnePlus Nord 4 specifications): 6.74-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் போன். மேலும் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2150 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 (Qualcomm Snapdragon 7+ Gen 3) சிப்செட் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் கலர்ஒஸ் (ColorOS) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் இந்தியாவில் அறிமுகமாகும்.
அதேபோல் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
குறிப்பாக OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882)மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் 4 போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
5500எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (100W charging வசதியும் உள்ளது.

குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போன் ஆனது இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் 5ஜி (5G), வைஃபை 6 (Wi-Fi 6), புளூடூத் 5.4 (bluetooth 5.4), என்எப்சி (NFC), ஜிபிஎஸ் (Gps), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
எப்போது அறிமுகம்? தற்போது ஆன்லைனில் வெளியான தகவலின்படி, வரும் ஜூலை மூன்றாவது வாரம் இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 4 போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய போன்.


Click it and Unblock the Notifications