அதிருது இந்திய மார்க்கெட்.. 50MP கேமரா.. 80W சார்ஜிங்.. புதிய ஒன்பிளஸ் போன் ரெடி.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
தற்போது புளூடூத் SIG தளத்தில் ஒன்பிளஸ் நோர்ட் 4 மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் போன்கள் காணப்பட்டுள்ளது. எனவே இந்த போன்கள் இந்த போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு ஒன்பிளஸ் நோர்ட் 4 போனின் மாடல் எண் CPH2619 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் போனின் மாடல் CPH2621 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த இரண்டு போன்களும் புளூடூத் 5.3 ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த ஒன்பிளஸ் நோர்ட் 4 போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் 4 அம்சங்கள் (OnePlus Nord 4 specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 4 போன் வெளிவரும். பின்பு 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2150 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் ( Snapdragon 7+ Gen 3 SoC) உடன் அசத்தலான ஒன்பிளஸ் நோர்ட் 4 போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் ஆக்ஸிஜன்ஓஎஸ் (OxygenOS) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ( Android 14) இயங்குதள வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் ந்த போனுக்கு கிடைக்கும்.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஒன்பிளஸ் நோர்ட் 4 போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன்.

இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் 5.3 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனில் 5500எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கும் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் உள்ளது. அதேபோல் ரூ.25000 பட்ஜெட்டில் இந்த போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








