உஷார்.. OnePlus போனுக்கு வந்த லேட்டஸ்ட் OS.. Update பண்ணதும் Camera-வில் சிக்கல்.. எந்த மாடல்?
லேட்டஸ்ட் ஆக்ஸிஜன் ஓஎஸ் அப்டேட்டை பெற்ற ஒன்பிளஸ் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஒன்றானது கேமரா தொடர்பான சிக்கல்களை சந்தித்து வருவதாக, குறிப்பிட்ட ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் புகார் அளித்த வண்ணம் உள்ளனர். அது என்ன மாடல்? என்ன சிக்கல்? இதோ விவரங்கள்:
ஒன்பிளஸ் நிறுவனம், இம்மாத தொடக்கத்தில் அதன் ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) ஸ்மார்ட்போனிற்கான லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட்டை வெளியிட்டது. அது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 15 (OxygenOS 15) அப்டேட் ஆகும்.

இருப்பினும் இந்த லேட்டஸ்ட் சாஃப்ட்வேர் அப்டேட் ஆனது ஸ்மார்ட்போனின் கேமராவை பயன்படுத்த முடியாததாக ஆக்குவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த லேட்டஸ்ட் ஓஎஸ்-ஐ அப்டேட் செய்த பல பயனர்கள் இந்த சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் மற்றும் ஒன்பிளஸ் பிராண்டின் அதிகாரப்பூர்வ கம்யூனிட்டி ஃபோரமில் இதுதொடர்பான புகார்களையும் அளித்துவருகின்றனர்.
இருப்பினும் இந்த அப்டேட் வழியாக ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனின் கேமராவில் ஏற்படும் பிரச்சனையை ஒன்பிளஸ் நிறுவனம் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. இந்த சிக்கலால் பாதித்த ஒரு பயனரின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனை கொண்டு குறைந்த வெளிச்சத்தில் படங்களை கிளிக் செய்யும் போது சிக்கல்கள் ஏற்படுகிறது. அவர் பகிர்ந்த புகைப்படத்தில் குறிப்பிடத்தக்க நாய்ஸ் மற்றும் விவரங்கள் சரியாக இல்லாததை பார்க்க முடிகிறது.
இதேபோல தங்கள் ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனை லேட்டஸ்ட் ஆக்ஸிஜன்ஓஎஸ் 15 ஓஎஸ்-க்கு அப்டேட் செய்த 2 பயனர்கள் பகிர்ந்துள்ள புகைப்படங்களில், வ்யூஃபைண்டரில் உள்ள படம் சாதாரணமாக தெரிகிறது. இருப்பினும், ஃபைனல் ரிசல்ட் ஆனது ஓவர் எக்ஸ்போஸ்டாக உள்ளது மற்றும் கான்ட்ராஸ்ட்டையும் கொண்டிருக்கவில்லை.
லேட்டஸ்ட் ஓஎஸ்- ஐ அப்டேட் செய்த ஒன்பிளஸ் நோர்த் 4 ஸ்மார்ட்போன் பயனர்களின் கூற்றுப்படி, அப்டேட் செய்யப்பட்டதிற்கு பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வாஷ்டு அவுட் செய்யப்பட்டது போலவும், அதிக நாய்ஸ் உள்ளதை போலவும் தெரிகிறது. மேலும் ஸ்மார்ட்போனின் கேமரா சில எக்ஸ்போஷர் சிக்கலை எதிர்கொள்வது போலவும் தெரிகிறது. பிற பயனர்களும் கூட இதே போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டதாக புகார் அளித்துள்ளனர்.
இந்த சிக்கலை சரிசெய்யும் ஒரு புதிய வெர்ஷன் இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அது சரியாக எப்போது வெளிவரும் என்பது குறித்த டைம்லைன் குறித்த விவரங்கள் இல்லை. ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனில் ஏற்பட்டுள்ள கேமரா தொடர்பான சிக்கல்களை சரிசெய்ய உதவும் அப்டேட் ஆனது ஓடிஏ-வாக விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனின் கேமராக்களை பொறுத்தவரை, இது ஓஐஎஸ் (OIS) மற்றும் இஐஎஸ் (EIS) ஆதரவு கொண்ட 50 எம்பி Sony LYT-600 ப்ரைமரி கேமரா + 112 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவை வழங்கும் 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை 16எம்பி செல்பீ கேமரா பூர்த்தி செய்யும்.
ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2150 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.74-இன்ச் 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ProXDR மற்றும் AquaTouch தொழில்நுட்பங்களையும் பேக் செய்கிறது. இதன்கீழ் உங்கள் விரல்கள் ஈரமாக இருந்தாலும் கூட இதன் டிஸ்பிளே ரெஸ்பான்சிவ் ஆக இருக்கும்.
ப்ராசஸரை பொறுத்தவரை, இது அட்ரெனோ 732 ஜிபியு (Adreno 732 GPU) உடனான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 SoC) கொண்டு இயங்குகிறது. இந்த சிப்செட் ஸ்னாப்டிராகன் 7ஜென் 3-ஐ விட 65 சதவீதம் வேகமான சிபியு, 130 சதவீதம் வேகமான ஜிபியு-வை வழங்கும் என்று கூறப்படுகிறது.
பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 100W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 5,500mAh பேட்டரியை கொண்டுள்ளது. அறியாதோர்களுக்கு, இதுவரை வெளியான எந்தவொரு நோர்ட் சீரீஸ் ஸ்மார்ட்போனிலும், இந்த அளவிலான மிகப்பெரிய பேட்டரி பேக் செய்யப்படவில்லை.


Click it and Unblock the Notifications








