சூப்பரு.. இனி OnePlus அக்கவுண்ட் உடன் லிங்க் செஞ்சா போதும்.. பட்ஜெட்-விலை மாடலுக்கு வந்த புது அப்டேட்!
ஒன்பிளஸ் நிறுவனம், இந்தியாவில் உள்ள பயனர்களிடமிருந்து தொடங்கி, ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனுக்கான ஆக்சிஜன் 15.0.0.701 அப்டேட்டை (OxygenOS 15.0.0.701 Update) படிப்படியாக வெளியிட தொடங்கியுள்ளது. அப்டேட் வெர்ஷன் ஆன CPH2661_15.0.0.701(EX01), இன்டர்பேஸ் லேஅவுட் (interface layout), சிஸ்டம் பெர்பார்மென்ஸ் (system performance), ப்ரைவஸி அம்சங்கள் (privacy features) மற்றும் கனெக்டிவிட்டி (connectivity) தொடர்பான மாற்றங்களை கொண்டுவந்துள்ளது
ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) ஸ்மார்ட்போன் பயனர்கள் இப்போது ஹாம் ஸ்க்ரீனில் உள்ள போல்டர்களை இழுப்பதன் மூலம் 1×2 அல்லது 2×1 ஆக அவைகளை ரீசைஸ் செய்யலாம். மேலும் இந்த அப்டேட் நோட்டிபிகேஷன்கள் மற்றும் குவிக் செட்டிங்ஸ்-களுக்கான மென்மையான அனிமேஷன்களையும் (smoother animations) கொண்டுவருகிறது. 4×6 ஹோம் ஸ்க்ரீன் லேஅவுட்டில் சிறப்பாக பொருந்த 2×2 மற்றும் 4×2 வடிவங்களில் உள்ள தேர்ட் பார்ட்டி விட்ஜெட்டுகளும் சரிசெய்யப்பட்டுள்ளன.

இந்த அப்டேட்டில் மார்ச் 2025 ஆண்ட்ராய்டுக்கான செக்யூரிட்டி அப்டேட்டும் (Security Update) சேர்க்கப்பட்டுள்ளது, இது ஒட்டுமொத்த சிஸ்டம் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. ப்ரைவஸி செட்டிங்ஸ இல், ப்ரைவஸி பாஸ்வேர்ட்-ஐ மீட்டமைக்கும் செயல்முறை மாற்றப்பட்டுள்ளது. பயனர்கள் இப்போது தங்கள் ப்ரைவஸி பாஸ்வேர்ட்-ஐ தங்கள் ஒன்பிளஸ் அக்கவுண்ட் உடன் இணைக்கும்படி கேட்கப்படுவார்கள். ஒருவேளை அவர்கள் அதை மறந்துவிட்டால் அக்கவுண்ட் மூலம் அதை மீட்டமைக்க முடியும்.
மேலும் நெட்வொர்க்குகளுக்கு இடையில் நகரும்போது மிகவும் நிலையான இணைப்பிற்காக வைஃபை ஸ்விட்சிங் மற்றும் மொபைல் டேட்டா ரோமிங் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த அப்டேட் படிப்படியாக வெளியிடப்படுகிறது, ஒரு சிறிய அளவிலான பயனர்கள் முதலில் இதை பெறுவார்கள். அடுத்த சில நாட்களில் பரந்த வெளியீடு தொடரும்.
ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2150 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.74-இன்ச் 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ProXDR மற்றும் AquaTouch தொழில்நுட்பங்களையும் பேக் செய்கிறது. இதன்கீழ் உங்கள் விரல்கள் ஈரமாக இருந்தாலும் கூட இதன் டிஸ்பிளே ரெஸ்பான்சிவ் ஆக இருக்கும்.
ப்ராசஸரை பொறுத்தவரை, இது அட்ரெனோ 732 ஜிபியு (Adreno 732 GPU) உடனான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 SoC) கொண்டு இயங்குகிறது. இந்த சிப்செட் ஸ்னாப்டிராகன் 7ஜென் 3-ஐ விட 65 சதவீதம் வேகமான சிபியு, 130 சதவீதம் வேகமான ஜிபியு-வை வழங்கும் என்று கூறப்படுகிறது.
ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி வரையிலான RAM மற்றும் 256ஜிபி வரையிலான UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 128ஜிபி ஆப்ஷனில் UFS 3.1 ஸ்டோரேஜ் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கேமராக்களை பொறுத்தவரை, இது ஓஐஎஸ் (OIS) மற்றும் இஐஎஸ் (EIS) ஆதரவு கொண்ட 50 எம்பி Sony LYT-600 ப்ரைமரி கேமரா + 112 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவை வழங்கும் 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை 16எம்பி செல்பீ கேமரா பூர்த்தி செய்யும்.
பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 100W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 5,500mAh பேட்டரியை கொண்டுள்ளது. அறியாதோர்களுக்கு, ஒன்பிளஸ் நோர்ட் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக வெளியான எந்தவொரு நோர்ட் சீரீஸ் ஸ்மார்ட்போனிலும், இந்த அளவிலான மிகப்பெரிய பேட்டரி பேக் செய்யப்படவில்லை.


Click it and Unblock the Notifications








