அசரவைக்கும் ஒன்பிளஸ்.. 100W சார்ஜிங்.. 16GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. புதிய Nord போன் ரெடி..
ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு அசத்தலான 5ஜி போனை அறிமுகம் செய்ய உள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
அதாவது ஒன்பிளஸ் ஏஸ் 3வி (OnePlus Ace 3V) எனும் ஸ்மார்ட்போனை இந்த மாதம் இறுதியில் சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். அதேபோல் ஒன்பிளஸ் ஏஸ் 3வி ஸ்மார்ட்போன் ஆனது உலக சந்தை மற்றும் இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த ஒன்பிளஸ் ஏஸ் 3வி ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் தான் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஒன்பிளஸ் ஏஸ் 3வி ஸ்மார்ட்போன் மாடலின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஒன்பிளஸ் ஏஸ் 3வி (நோர்ட் 4) அம்சங்கள் (OnePlus Ace 3V (Nord 4) specifications) : 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5கே ரெசல்யூஷன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) வசதியுடன் ஒன்பிளஸ் ஏஸ் 3வி அறிமுகம் செய்யப்படும். அதேபோல் 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 chipset) வசதியுடன் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 3வி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட். மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 732 ஜிபியு (Adreno 732 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் ஒன்பிளஸ் ஏஸ் 3வி அறிமுகமாகும்.
16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் ஒன்பிளஸ் ஏஸ் 3வி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் ஒன்பிளஸ் ஏஸ் 3வி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (100W fast charging) வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரியை சார்ஜ் சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேசமயம் இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.
ஒன்பிளஸ் ஏஸ் 3வி ஸ்மார்ட்போனில் யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. குறிப்பாக இந்த போன் ட்ரிபிள் ரியர் கேமராவடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒன்பிளஸ் ஏஸ் 3வி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








