OnePlus Nord 4 அறிமுகமானது.. மொத்த இந்தியாவும் அடிச்சு புடிச்சு வாங்கும் விலை.. எப்போது முதல் விற்பனை?
எதிர்பார்த்தபடியே இன்று (ஜூலை 16) நடந்த ஒன்பிளஸ் சம்மர் லான்ச் ஈவென்ட்டில் (OnePlus Summer Launch Event) ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) மாடலை அறிமுகம் செய்தது. மிட்-ரேன்ஜ் விலைப்பிரிவில் பெயர்போன நோர்ட் சீரீஸின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எப்போது முதல் விற்பனைக்கு வரும்? இதோ விவரங்கள்:
ஒன்பிளஸ் நோர்ட் 4 விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை விவரங்கள்: இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸிக் 8GB ரேம் + 128GB ஆப்ஷன் ரூ.29,999 க்கும், 8GB ரேம் + 256GB ஆப்ஷன் ரூ.32,999 க்கும் மற்றும் ஹை-எண்ட் வேரியண்ட் ஆன 12GB ரேம் + 256GB ஆப்ஷன் ரூ.35,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனிற்கான ப்ரீ ஆர்டர்கள் அமேசன் (Amazon) மற்றும் ஒன்பிளஸின் ஆன்லைன் ஸ்டோர் வழியாக ஜூலை 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் மற்றும் திறந்த விற்பனை ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெறும். இந்த ஸ்மார்ட்போன் அப்சிடியன் மிட்நைட், மெர்குரியல் சில்வர் மற்றும் ஒயாசிஸ் க்ரீன் (Obsidian Midnight, Mercurial Silver, Oasis Green) என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.
ஒன்பிளஸ் நோர்ட் 4 அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2150 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.74-இன்ச் 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ProXDR மற்றும் AquaTouch தொழில்நுட்பங்களையும் பேக் செய்கிறது. இதன்கீழ் உங்கள் விரல்கள் ஈரமாக இருந்தாலும் கூட இதன் டிஸ்பிளே ரெஸ்பான்சிவ் ஆக இருக்கும்.

ப்ராசஸரை பொறுத்தவரை, இது அட்ரெனோ 732 ஜிபியு (Adreno 732 GPU) உடனான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 SoC) கொண்டு இயங்குகிறது. இந்த சிப்செட் ஸ்னாப்டிராகன் 7ஜென் 3-ஐ விட 65 சதவீதம் வேகமான சிபியு, 130 சதவீதம் வேகமான ஜிபியு-வை வழங்கும் என்று கூறப்படுகிறது.
ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி வரையிலான RAM மற்றும் 256ஜிபி வரையிலான UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 128ஜிபி ஆப்ஷனில் UFS 3.1 ஸ்டோரேஜ் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கேமராக்களை பொறுத்தவரை, இது ஓஐஎஸ் (OIS) மற்றும் இஐஎஸ் (EIS) ஆதரவு கொண்ட 50 எம்பி Sony LYT-600 ப்ரைமரி கேமரா + 112 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவை வழங்கும் 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை 16எம்பி செல்பீ கேமரா பூர்த்தி செய்யும்.
பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 100W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 5,500mAh பேட்டரியை கொண்டுள்ளது. அறியாதோர்களுக்கு, இதுவரை வெளியான எந்தவொரு நோர்ட் சீரீஸ் ஸ்மார்ட்போனிலும், இந்த அளவிலான மிகப்பெரிய பேட்டரி பேக் செய்யப்படவில்லை.


Click it and Unblock the Notifications








