ஆர்டர் அடி கொளுத்துதே.. ரூ.7000 டிஸ்கவுண்ட் கொடுத்தா யாரு விடுவா.. அதுவும் இந்த OnePlus போனுக்கு!
2025 ஆம் ஆண்டின் ஒன்பிளஸ் நிறுவனம் எந்தவிதமான போல்டபிள் ஸ்மார்ட்போனையும் (OnePlus Open 2) அறிமுகம் செய்யாது என்பதை வெளிப்படையாக அறிவித்துவிட்டு காரணத்தால்.. மார்ச் அல்லது ஏப்ரல் 2025 இல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 13 மினி (OnePlus 13 Mini) மட்டுமே.. அடுத்துவரும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் என்கிற பட்டியலில் உள்ளது.
அதாவது ஒன்பிளஸின் பட்ஜெட் விலை சீரீஸ் ஆன நோர்ட் சீரிஸின் (OnePlus Nord Series) கீழ் அடுத்த என்ன மாடல் வரும் என்கிற யூகங்கள் கூட, ஒரு லீக்ஸ் கூட இப்போது வரை வெளியாகவில்லை. ஆக இதுதான் ஆபர் விலையில் வாங்க கிடைக்கும் பழைய நோர்ட் சீரீஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க சரியான நேரம். இந்த நேரத்தில் நீங்கள் முதலில் செல்ல வேண்டியது - அமேசான் இந்தியா வலைத்தளத்திற்கு தான்!

ஏனென்றால்.. அங்குதான் கடந்த 2024 ஜூலை மாதத்தில் நடந்த ஒன்பிளஸ் சம்மர் லான்ச் ஈவென்ட்டில் வெளியான ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி (OnePlus Nord 4 5G) ஸ்மார்ட்போனின் மீது முழுதாக ரூ.7000 தள்ளுபடி கிடைக்கிறது. தற்போது அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 256 இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது, அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.32,999 க்கு பதிலாக 9% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.29,999 க்கு வாப்பிக கிடைக்கிறது
கூடுதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட (எச்டிஎப்சி, ஆக்சிஸ் உட்பட) வங்கிகளின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.4000 வரையிலான டிஸ்கவுண்ட் கிடைக்கும். இப்படியாக ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.25,999 க்கு கொண்டு வர முடியும். இந்த ஸ்மார்ட்போன் அப்சிடியன் மிட்நைட், மெர்குரியல் சில்வர் மற்றும் ஒயாசிஸ் க்ரீன் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது.
ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2150 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.74-இன்ச் 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ProXDR மற்றும் AquaTouch தொழில்நுட்பங்களையும் பேக் செய்கிறது. இதன்கீழ் உங்கள் விரல்கள் ஈரமாக இருந்தாலும் கூட இதன் டிஸ்பிளே ரெஸ்பான்சிவ் ஆக இருக்கும்.
ப்ராசஸரை பொறுத்தவரை, இது அட்ரெனோ 732 ஜிபியு (Adreno 732 GPU) உடனான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 SoC) கொண்டு இயங்குகிறது. இந்த சிப்செட் ஸ்னாப்டிராகன் 7ஜென் 3-ஐ விட 65 சதவீதம் வேகமான சிபியு, 130 சதவீதம் வேகமான ஜிபியு-வை வழங்கும் என்று கூறப்படுகிறது.
ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி வரையிலான RAM மற்றும் 256ஜிபி வரையிலான UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 128ஜிபி ஆப்ஷனில் UFS 3.1 ஸ்டோரேஜ் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கேமராக்களை பொறுத்தவரை, இது ஓஐஎஸ் (OIS) மற்றும் இஐஎஸ் (EIS) ஆதரவு கொண்ட 50 எம்பி Sony LYT-600 ப்ரைமரி கேமரா + 112 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவை வழங்கும் 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை 16எம்பி செல்பீ கேமரா பூர்த்தி செய்யும்.
பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 100W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 5,500mAh பேட்டரியை கொண்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போன் வெளியாகும் முன்பு வரையிலாக எந்தவொரு நோர்ட் சீரீஸ் ஸ்மார்ட்போனிலும், இந்த அளவிலான மிகப்பெரிய பேட்டரி பேக் செய்யப்படவில்லை.


Click it and Unblock the Notifications