Home
Mobile

திடீர் விலை குறைப்பு.. OnePlus 5ஜி போன்.. 50எம்பி OIS EIS கேமரா, 100W சார்ஜிங், 5500mAh பேட்டரி.. என்ன மாடல்?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுக தேதியை (2025 ஜூலை 8) அறிவித்த வேகத்தில், கடந்த ஜூலை 2024 இல் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி (OnePlus Nord 4 5G) ஸ்மார்ட்போனின் விலை குறைந்து உள்ளது.

தற்போது பிளிப்கார்ட்டில் (Flipkart) 8ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் சில்வர் கலர் ஆப்ஷன் ஆனது ரூ.27,951 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் கிரீன் கலர் ஆப்ஷன் ரூ.28,990 க்கு வாங்க கிடைக்கிறது.

திடீர் விலை குறைப்பு.. OnePlus 5ஜி போன்.. என்ன மாடல்?

அதாவது மேற்கண்ட 2 ஸ்டோரேஜ் மற்றும் கலர் வேரியண்ட்களுமே அசல் அறிமுக விலையை விட மலிவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஜூலை 2024 இல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட போது ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.29,999 க்கும் அறிமுகமானது

ஆக ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் சில்வர் கலர் ஆப்ஷன் ஆனது தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.2048 விலை குறைப்பை பெற்றுள்ளது. மறுகையில் உள்ள 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1009 விலை குறைப்பை பெற்றுள்ளது. நேரடி விலைக்குறைப்பை தவிர்த்து பிளிப்கார்ட் வலைத்தளத்தில் சில வங்கி சலுகைகளும் அணுக கிடைக்கின்றன. இதன் மூலம் விலையை இன்னும் குறைக்க முடியும்.

திடீர் விலை குறைப்பு.. OnePlus 5ஜி போன்.. என்ன மாடல்?

ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் (OnePlus Nord 4 Specifications): டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2150 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.74-இன்ச் 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இது ProXDR மற்றும் AquaTouch தொழில்நுட்பங்களையும் பேக் செய்கிறது. இதன்கீழ் உங்கள் விரல்கள் ஈரமாக இருந்தாலும் கூட இதன் டிஸ்பிளே ரெஸ்பான்சிவ் ஆக இருக்கும். ப்ராசஸரை பொறுத்தவரை, இது அட்ரெனோ 732 ஜிபியு (Adreno 732 GPU) உடனான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 SoC) கொண்டு இயங்குகிறது.

திடீர் விலை குறைப்பு.. OnePlus 5ஜி போன்.. என்ன மாடல்?

இந்த சிப்செட் ஸ்னாப்டிராகன் 7ஜென் 3-ஐ விட 65 சதவீதம் வேகமான சிபியு, 130 சதவீதம் வேகமான ஜிபியு-வை வழங்கும் என்று கூறப்படுகிறது. ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி வரையிலான RAM மற்றும் 256ஜிபி வரையிலான UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 128ஜிபி ஆப்ஷனில் UFS 3.1 ஸ்டோரேஜ் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கேமராக்களை பொறுத்தவரை, இது ஓஐஎஸ் (OIS) மற்றும் இஐஎஸ் (EIS) ஆதரவு கொண்ட 50 எம்பி Sony LYT-600 ப்ரைமரி கேமரா + 112 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவை வழங்கும் 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை 16எம்பி செல்பீ கேமரா பூர்த்தி செய்யும். பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 100W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 5,500mAh பேட்டரியை கொண்டுள்ளது.

புதிய ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை இது வருகிற 2025 ஜூலை 8 ஆம் தேதியன்று மதியம் 2 மணிக்கு (இந்திய நேரப்படி) அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இவ்விரு ஸ்மார்ட்போன்களுடன் ஒன்பிளஸ் பட்ஸ் 4 (OnePlus Buds 4) அறிமுகம் செய்யப்படும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus Nord 4 gets Up to Rs 2000 Discount Ahead OnePlus Nord 5 India launch on July 8
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X