விஸ்வரூப விற்பனை.. ரூ.27,000 பட்ஜெட்ல 100W சார்ஜிங்.. SONY கேமரா.. 5500mAh பேட்டரி.. 8GB ரேம்.. எந்த மாடல்?
அமேசான் எலக்ட்ரானிக் ஃபெஸ்டிவ் விற்பனையில் (Amazon Electronics Festive Sale) அமோலெட் டிஸ்பிளே, சோனி எல்ஒய்டி சென்சார் மெயின் கேமரா, சாம்சங் சென்சார் செல்பீ கேமரா,100W சூப்பர்வூக் சார்ஜிங், 5500mAh பேட்டரி போன்ற பிரீமியம் பீச்சர்களை கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) போனுக்கு பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் 4 போனில் என்னென்ன பீச்சர்கள் பேக் செய்யப்பட்டுள்ளன? டிஸ்கவுண்ட் எப்படி? உள்ளிட்ட விவரங்கள் இதோ.
ஒன்பிளஸ் நோர்ட் 4 அம்சங்கள் (OnePlus Nord 4 Specifications): கேமரா பிரியர்களுக்கான பிரீமியம் சென்சார்களுடன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera) வருகிறது. சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சார் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது.

மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) மற்றும் ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் வருகிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். மேலும், 16 எம்பி செல்பீ ஷூட்டரிலும் சாம்சங் எஸ்5கே3பி9 (Samsung S5K3P9) சென்சார் மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் வருகிறது.
கேமராவை போலவே டிஸ்பிளே பீச்சர்களும் மிரள விடுகின்றன. 6.74 இன்ச் (2772 × 1240 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2150 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+), அல்ட்ரா எச்டிஆர் (Ultra HDR) மற்றும் ப்ரோஎக்ஸ்டிஆர் (ProXDR) வருகிறது.
இதுபோக அக்வா டச் (Aqua Touch) சப்போர்ட் வருகிறது. மிரளவிடும் மிட்-ரேஞ்ச் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 7+ Gen 3 4nm) சிப்செட் மற்றும் பட்டையை கிளப்பும் கேமிங் அவுட்புட் கொண்ட அட்ரினோ 732 ஜிபியு (Adreno 732 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 2 வேரியண்ட்கள் கிடைக்கின்றன.
ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 மாடல்களை ஆர்டர் செய்து கொள்ளலாம். மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சிலாட் வருகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 (Oxygen OS 14) மற்றும் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) உள்ளது.
இந்த ஒன்பிளஸ் நோர்ட் 4 போனில் 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) கொண்ட 5500mAh பேட்டரி வருகிறது. பிரீமியம் பேட்டரி சிஸ்டம் வருவதால், பேட்டரி ஹெல்த் என்ஜின் (Battery Health Engine) சப்போர்ட் வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன.
இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.29,998ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.32,998ஆகவும் இருக்கிறது. அமேசான் எலக்ட்ரானிக் ஃபெஸ்டிவ் விற்பனையை முன்னிட்டு ரூ.2000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது. ரூ.28000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications