சிட்டாக பறக்கும் ஆர்டர்.. 100W சார்ஜிங்.. SONY கேமரா.. 5500mAh பேட்டரி.. ஆஃபரில் ஒன்பிளஸ் போன்.. எந்த மாடல்?
குடியரசு தினத்தை முன்னிட்டு ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங், 50எம்பி கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது ஒன்பிளஸ் இணையதளத்தில் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போன் ரூ.28,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்த இணையதளத்தில் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.4000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஒன்பிளஸ் நோர்ட் 4 போனை தற்போது ரூ.24,999 விலையில் வாங்கிவிட முடியும்.

ஒன்பிளஸ் நோர்ட் 4 அம்சங்கள் (OnePlus Nord 4 specifications): 6.74-இன்ச் 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் 4. 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2150 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் இது ProXDR மற்றும் AquaTouch தொழில்நுட்பங்களையும் பேக் செய்கிறது. இதன்கீழ் உங்கள் விரல்கள் ஈரமாக இருந்தாலும் கூட இதன் டிஸ்பிளே ரெஸ்பான்சிவ் ஆக இருக்கும்.
அட்ரெனோ 732 ஜிபியு (Adreno 732 GPU) உடனான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 SoC) கொண்டு இயங்குகிறது ஒன்பிளஸ் நோர்ட் 4 . இந்த சிப்செட் ஸ்னாப்டிராகன் 7ஜென் 3-ஐ விட 65 சதவீதம் வேகமான சிபியு, 130 சதவீதம் வேகமான ஜிபியு-வை வழங்கும் என்று கூறப்படுகிறது. சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட்.
ஒன்பிளஸ் நோர்ட் 4 ஆனது ஓஐஎஸ் (OIS) மற்றும் இஐஎஸ் (EIS) ஆதரவு கொண்ட 50 எம்பி Sony LYT-600 ப்ரைமரி கேமரா + 112 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவை வழங்கும் 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை 16எம்பி செல்பீ கேமரா பூர்த்தி செய்யும்.
பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 100W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 5,500mAh பேட்டரியை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் இதன் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஆக்ஸிஜன் ஓஎஸ் 14 (Oxygen OS 14) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதில் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். மேலும் ஒன்பிளஸ் நிறுவனம் கூடிய விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








