வாங்குனா இப்புடி ஒரு போன் வாங்கனும்.. Sony கேமரா.. 100W சார்ஜிங்.. 512GB மெமரி.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸமார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 3வி (OnePlus Ace 3V) வரும் நாட்களில் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது.
இதே ஒன்பிளஸ் ஏஸ் 3வி ஸ்மார்ட்போன் தான் இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 4 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் நோர்ட் 4 அம்சங்கள் (OnePlus Nord 4 specifications): சக்திவாய்ந்த ஸ்னாப்ராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் வசதியுடன் இந்த அசத்தலான ஒன்பிளஸ் நோர்ட் 4 போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது என ஒன்பிளஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 4 போனில் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 பிரைமரி சென்சார் + 8எம்பி சோனி ஐஎம்எக்ஸ்355 அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் 4 போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி சாம்சங் எஸ்5கே3பி9 சென்சார் வசதி உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களுடன் ஒன்பிளஸ் நோர்ட் 4 போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
ஒன்பிளஸ் நோர்ட் 4 போன் 6.74-இன்ச் 1.5கே அமோலெட் டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 2150 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (2150 nits of peak brightness), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. எனவே ஒன்பிளஸ் நோர்ட் 4 போனின் டிஸ்பிளே தனித்துவமான திரை அனுபவத்தை வழங்கும்.

5500எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் நோர்ட் 4 போன். மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 100று சூப்பர்வூக் வயர்டு சார்ஜிங் உள்ளது. எனவே இந்த போனின் பேட்டரியை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேசமயம் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் இந்த போன்.
ColorOS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 4 போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். இதுதவிர 5ஜி ஆதரவு, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.
குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் 4 போன் ஆனது இந்தியாவில் ரூ.30,000-க்கு கீழ் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த தொலைப்பேசியில் இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய ஒன்பிளஸ் போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications