7 வருடங்களுக்கு பிறகு.. இரும்பு கோட்டை மாதிரி ஒரு OnePlus போன்.. பட்ஜெட்ல இப்படி ஒரு போனா? எப்போ அறிமுகம்?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் புதிய ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி (OnePlus Nord 4 5G) ஸ்மார்ட்போன் சாதனத்தை வரும் ஜூலை 16, 2024 ஆம் தேதி இத்தாலியில் (Italy) நடைபெறவுள்ள ஒன்பிளஸ் நிகழ்வில் (OnePlus Event) அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. ஒன்பிளஸ் நோர்ட் சீரிஸ் (OnePlus Nord Series) வரிசையில் புதிய சேர்ப்பாக இந்த புத்தம் புதிய பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன் (Budget Segment Smartphone) சேரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்பாக சில தகவல்கள் லீக் ஆகியுள்ளது.
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் வரும் ஜூலை 16 ஆம் தேதி இத்தாலியில் ஒரு முக்கியமான ஒன்பிளஸ் ஈவென்ட் நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஒன்பிளஸ் நிறுவனம், ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி (OnePlus Nord 4 5G) சாதனத்துடன், இன்னும் பல புதிய சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிமுகத்திற்கு முன்பாக ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி ஸ்மார்ட்போனின் ஸ்கெட்ச்சிங் புகைப்படம் இப்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

பட்ஜெட்ல இரும்பு கோட்டை மாதிரி ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி போன் (OnePlus Nord 4 5G):
இதற்கு முன்பு வரை, விரைவில் அறிமுகம் செய்யப்படவிருக்கும் ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி (OnePlus Nord 4 5G) ஸ்மார்ட்போன் சாதனம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் 3V (OnePlus Ace 3V) போல காட்சியளிக்கும் என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால், இன்று வெளியாகியுள்ள புதிய ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி ஸ்மார்ட்போனின் ஸ்கெட்ச்சிங் (Sketch) வரைபடம் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளித்து அதிர்ச்சி தந்துள்ளது.
டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக வெளிவந்த லீக் தகவலின் படி, புதிய ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) சாதனத்தின் கேமரா டெக்கோ கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது. இதை தவிர OnePlus Nord 4 ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த ரியர் பாடி பேனல் முழுமையாக ஒரே பீஸ் மெட்டல் பாடியாக வெளிவரப் போகிறது என்று டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு ஒன்பிளஸ் நிறுவனம் அதனுடைய ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனில் மட்டும் மெட்டல் பாடியை வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்திருந்தது. ஏறக்குறைய, 7 வருடங்களுக்கு பிறகு, ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி (OnePlus Nord 4 5G) ஸ்மார்ட்போன் மூலம் மெட்டல் பாடி வடிவமைப்பை மீண்டும் சந்தைக்குள் கொண்டுவர பார்ப்பது போல் தெரிகிறது.
7 வருடங்களுக்கு பிறகு முழுமையான சிங்கிள் பீஸ் மெட்டல் பாடியுடன் OnePlus Nord 4:
புதிதாக எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி ஸ்மார்ட்போனில் 6.74" இன்ச் 1.5K உடன் 2.8D curved AMOLED டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 3 சிப்செட் உடன் எதிர்பார்க்கப்படுகிறது. இது 50MP சோனி IMX882 உடன் OIS ஆதரவுடைய மெயின் கேமராவை பெரும். இத்துடன் 8MP அல்ட்ரா வைடு கேமரா இணைக்கப்படும்.
இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி (OnePlus Nord 4 5G) ஸ்மார்ட்போன் சாதனம் 5500mAh பேட்டரி உடன் 100W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் உடன் எதிர்பார்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் விலை பற்றி பேசுகையில், OnePlus Nord 4 5G போன் இந்தியாவில் ரூ. 32,000 விலை முதல் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








