Home
Mobile

சிங்கம் களமிறங்குதே.. யாரும் எதிர்பார்க்காத புது அம்சத்துடன் OnePlus Nord 4.. அதுவும் பட்ஜெட் விலைலயா?

இந்தியாவில் அடுத்த பட்ஜெட் கிங் ஸ்மார்ட்போனாக மாறப்போகும் ஒரு புதிய ஒன்பிளஸ் (OnePlus) ஸ்மார்ட்போனைப் பற்றியது தான் இந்த பதிவு மக்களே. ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் புதிய ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி (OnePlus Nord 4 5G) ஸ்மார்ட்போன் சாதனத்தை வரும் ஜூலை 16, 2024 ஆம் தேதி இத்தாலியில் (Italy) நடைபெறவுள்ள ஒன்பிளஸ் நிகழ்வில் (OnePlus Event) அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கு முன்பாக இந்த ஸ்மார்ட்போன் பற்றிய சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஜூலை 16 ஆம் தேதி நிகழவிருக்கும் ஒன்பிளஸ் ஈவென்ட் வழியாக இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி (OnePlus Nord 4 5G) ஸ்மார்ட்போன் சாதனத்தை நிறுவனம் வெளியிடவுள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் செரிஸ் என்றாலே அது பட்ஜெட் செக்மென்ட் போனாக தான் இருக்குமென்பது நம் அனைவரும் அறிந்தவொன்றே என்றாலும், இந்த முறை பட்ஜெட் செக்மென்ட் போனில் யாரும் எதிர்பார்த்திடாத ஒரு விஷயத்தை ஒன்பிளஸ் இந்த முறை செய்துள்ளது.

சிங்கம் களமிறங்குதே.. யாரும் எதிர்பார்க்காத புது அம்சத்துடன் OnePlus

ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி (OnePlus Nord 4 5G):

காரணம், இதுவரை நோர்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிளாஸ்டிக் பாடி வடிவமைப்பை பெற்றிருந்தன. ஆனால், முதல் முறையாக, ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி (OnePlus Nord 4 5G) போனை நிறுவனம் மிகவும் உறுதியான மெட்டல் பாடி வடிவமைப்புடன் வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி ஸ்மார்ட்போன் பார்ப்பதற்கு பிரீமியம் தரத்தில் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிரத்தியேகமான அலெர்ட் ஸ்லைடர் பட்டனும் கூட எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி (OnePlus Nord 4 5G) ஸ்மார்ட்போனில் 6.74" இன்ச் 1.5K உடன் 2.8D curved AMOLED டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 3 சிப்செட் உடன் எதிர்பார்க்கப்படுகிறது. இது 50MP சோனி IMX882 உடன் OIS ஆதரவுடைய மெயின் கேமராவை பெரும். இத்துடன் 8MP அல்ட்ரா வைடு கேமரா இணைக்கப்படும்.

இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி (OnePlus Nord 4 5G) ஸ்மார்ட்போன் சாதனம் 5500mAh பேட்டரி உடன் 100W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் உடன் எதிர்பார்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் நிறம் பற்றிய தகவல்கள் கூட சமீபத்திய லீக் தகவல் மூலம் இணையத்தில் கசிந்தன. அந்த தகவலின் அடிப்படையில், OnePlus Nord 4 5G பிளாக் மற்றும் மின்ட் கலர் நிறங்களில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

சிங்கம் களமிறங்குதே.. அதுவும் யாரும் எதிர்பார்க்காத புது அம்சத்துடன் OnePlus Nord 4:

இதை உறுதிப்படுத்தும் சில ரெண்டர் புகைப்படங்களும் கூட இணையத்தில் லீக் ஆகியுள்ளன. இத்துடன் வெள்ளை அல்லது சில்வர் நிறத்தில் கூட ஒரு OnePlus Nord 4 5G சாதனம் அறிமுகம் செய்யப்படலாம் என்று வதந்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், அவற்றின் ரெண்டர் படங்கள் இப்போது வரை எங்கும் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை இந்தியாவில் ரூ. 32,000 விலைக்குள் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 4 5G Mobile With Metal Body Design Launching On July 16 2024 Check Leaked Specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X