தூக்குங்கடா அந்த தங்கத்த.. முழுசா ரூ.2000 கட்.. பட்ஜெட்ல OnePlus.. SONY கேமரா.. 100W சார்ஜிங்.. எந்த மாடல்?
ஓணம் பண்டிகையை முன்னிட்டு அமேசான் விற்பனையில் (Amazon Sale) 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி, 2150 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, சோனி எல்ஒய்டி சென்சார் கொண்ட 50 எம்பி ரியர் கேமரா போன்ற பிரீமியம் பீச்சர்களை கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி போனானது நம்ப முடியாத தள்ளுபடியில் ஆர்டருக்கு வருகிறது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி போனின் பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.
இந்தியாவில் ஒன்பிளஸ் போன்களுக்கு தனி மார்க்கெட் இருக்கிறது. அதிலும் நோர்ட் சீரிஸ் மாடல்களுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. இவர்களை தட்டி தூக்கும்படியான டிஸ்கவுண்டில் இப்போது ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி மாடல் விற்பனைக்கு கிடைக்கிறது. இதற்கு காரணம் அந்த போனின் அம்சங்கள் மட்டுமே.

ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி அம்சங்கள் (OnePlus Nord 4 5G Specifications): இந்த நோர்ட் மாடலானது, கேமரா, சிப்செட், பேட்டரி மற்றும் டிசைனில் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. பிரீமியம் சென்சார் கேமரா, அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங், பெரிய பேட்டரி மற்றும் மெட்டல் பாடி கொண்டிருக்கிறது. கேமராவை பார்க்கையில், 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.
இந்த கேமராவில் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் பேக் செய்ய்பட்டுள்ளது. அதேபோல 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவும் சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த டூயல் ரியர் சிஸ்டமானது, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி சப்போர்ட் கொண்டிருக்கிறது.
இந்த கேமராவில் ஆட்டோ போகஸ் (Auto Focus) உள்ளது. மேலும், 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. செல்பீ கேமராவில் சோனி கேமரா வரவில்லை. இருப்பினும், சாம்சங் எஸ்5கே3பி9 (Samsung S5K3P9) சென்சாருடன் 16 எம்பி செல்பீ பேக் செய்யப்பட்டுள்ளது. பேட்டரி ஹெல்த் என்ஜின் (Battery Health Engine) சப்போர்ட் கொண்ட 5500mAh பேட்டரி வருகிறது.
இந்த பேட்டரிக்கு 100W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. ஆகவே, அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் நீண்ட் பேக்கப் கொண்ட மாடலாக இந்த ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி போன் இருக்கிறது. அதேபோல டிஸ்பிளேவிலும் பிரீமியம் காட்டியிருக்கிறது. அக்வா டச் (Aqua Touch) கொண்ட 6.74 இன்ச் (2772 × 1240 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது.
இதுவொரு 2150 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கொண்ட அமோலெட் (AMOLED) மாடலாகும். மேலும், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, அல்ட்ரா எச்டிஆர் (Ultra HDR) மற்றும் ப்ரோஎக்ஸ்டிஆர் (ProXDR) சப்போர்ட் கொண்டிருக்கிறது. அட்ரினோ 732 ஜிபியு (Adreno 732 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்யப்பட்டுள்ளது.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 7+ Gen 3 4nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் வருகிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் கொண்ட மாடலாக இந்த போனை எதிர்பார்க்கலாம். 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) பயன்படுத்தலாம்.
இந்த ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.29,998ஆக இருக்கிறது. இப்போது, அமேசானில் ஓணம் விற்பனையை முன்னிட்டு ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் ஆர்டருக்கு கிடைக்கிறது. ரூ.28000 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் வருகிறது. ஆகவே, ரூ.27,998 பட்ஜெட்டில் இந்த போனை ஆர்டர் செய்யலாம்.


Click it and Unblock the Notifications