சும்மா மாஸ்-ஆ இருக்கேப்பா.. பேசாம OnePlus Nord 3 வாங்கிடலாம் போலயே.. என்ன விலை?
அட இது நல்லா இருக்கே.. ரூ.57,000 க்கு கிடைக்குற ஒன்பிளஸ் 11 க்கு பதிலா.. ரூ.44,999 க்கு கிடைக்குற ஒன்பிளஸ் 11ஆர்-க்கு பதிலா.. பேசமா ஒன்பிளஸ் நோர்ட் 3 மாடலை வாங்கிடலாம் போலயே என்கிற எண்ணம் உங்களுக்குள் எழுந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை!
ஏனென்றால் (கூடிய விரைவில்) இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3) ஆக அறிமுகம் செய்யப்படவுள்ள ஒன்பிளஸ் ஏஸ் 2வி (OnePlus Ace 2V) ஸ்மார்ட்போனின் டிசைனும் சரி, அம்சங்களும் சரி, விலையும் சரி.. ஒரு ஒன்பிளஸ் பிராண்டட் போனை வாங்க வேண்டுமென்கிற ஆசை கொண்ட எவரையுமே ஈர்க்கும்படி உள்ளது.

சீனாவில் OnePlus Ace 2V.. ஆனால் இந்தியாவில் OnePlus Nord 3
சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் வி2 ஸ்மார்ட்போனுக்கு ஒரு பெரிய நன்றி. ஏனென்றால் அதே ஸ்மார்ட்போன் தான் இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நோர்ட் 3 ஆக அறிமுகமாக உள்ளது. ஆக ஒன்பிளஸ் நோர்ட் 3 அறிமுகமாகும் முன்பே அதன் டிசைன், அம்சங்கள் மற்றும் விலை பற்றிய விவரங்கள் நமக்கு கிடைத்துவிட்டது!
ஒன்பிளஸ் நோர்ட் 3 அம்சங்கள்
ஒன்பிளஸ் நோர்ட் 3 பெரும்பாலும் ஒன்பிளஸ் ஏஸ் வி2-வின் ரீபிராண்டட் வெர்ஷனாகவே இருக்கும். அதாவது இந்த இரண்டுமே ஒரே மாதிரியான அம்சங்களை பகிர்ந்து கொள்ளும். அதன்படி ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போனில் 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ்ரேட் உடனான 6.74-இன்ச் அமோஎல்இடி டிஸ்ப்ளே இருக்கும்.
ரேம் மற்றும் இன்டர்னல் ஸ்டோரேஜ்
மேலும் இது 16ஜிபி வரையிலான LPDDR5X ரேம் மற்றும் 512GB வரை UFS3.1 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட டைமன்சிட்டி 9000 (Dimensity 9000) சிப்செட் மூலம் இயக்கப்படும். இந்த லேட்டஸ்ட் ஒன்பிளஸ் மாடல் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நிறுவனத்தின் சொந்த ஆக்ஸிஜென் ஓஎஸ்-ஐ கொண்டிருக்கும்.
ரியர் மற்றும் செல்பீ கேமராக்கள்
கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் 3-இல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும். அதில் ஓஐஎஸ் ஆதரவுடனான 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ராவைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா பேக் செய்யப்படும். முன்பக்கத்தில் செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு 16எம்பி செல்பீ கேமரா இருக்கும்.
ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பேட்டரி
ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போனில் 5,000mAh பேட்டரி இருக்கும் மற்றும் அது 80W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும். கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது 5ஜி-க்கான ஆதரவு, இன்-ஸ்கிரீன் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், ப்ளூடூத் 5.3, ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் போன்றவைகளை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் 3 விலை மற்றும் இந்திய அறிமுகம்
சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 2வி ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.27,200 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆக இதே போன்ற விலை நிர்ணயத்தை ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போனிலும் எதிர்பார்க்கலாம். ஒன்பிளஸ் நோர்ட் 3 தொடர்பாக இன்னும் ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் வெளியாகவில்லை; அது ஒன்பிளஸ் நோர்ட் 3-ன் இந்திய அறிமுக தேதி. அதுவும் கூடிய விரைவில் அறிவிக்கப்படலாம்!


Click it and Unblock the Notifications








