இந்தியர்களுக்கு கிடைக்க இருக்கும் OnePlus பொக்கிஷம்.. இப்படியொரு கேமரா வசதியா? ரெடியா இருங்க..
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் நோர்ட் 3 போனை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது ஜூலை 5 ஆம் தேதி இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் 3 அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் 3 போன் ஆனது தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும். அதாவது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50MP Sony IMX890 சென்சார் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போனின் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் நோர்ட் 3 போன் 50எம்பி பிரைமரி கேமரா( Sony IMX890 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.
அதேபோல் ஒன்பிளஸ் நோர்ட் 3 போன் ஆனது 16ஜிபி ரேம் மறறும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ஒன்பிளஸ் நோர்ட் 3 போன் மீடியாடெக் டைமன்சிட்டி 9000 சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதாவது டைமன்சிட்டி 9000 சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு OxygenOS சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும்.
குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் 3 போன் ஆனது 6.74-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3 போன் அறிமுகமாகும்.
இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 5ஜி, 4ஜி வோல்ட்இ, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3 போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் ரூ.32,000-விலையில் இந்த போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது.
photo courtesy: 91mobiles.com


Click it and Unblock the Notifications