அடடே.. இந்த புதிய OnePlus போன்கள் சீக்கிரம் வரப்போகுதா! சியோமி, விவோ எல்லாம் தொடை நடுங்கி போய் கெடக்கறாங்க.!
ஒன்பிளஸ் நிறுவனம் தனித்துவமான ஸ்மார்ட்போன்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றன. அதுவும் பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். குறிப்பாக சியோமி, விவோ போன்களை விட ஒன்பிளஸ் போன்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் நோர்ட் 3 மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது ஜூன் மாத இறுதியில் இந்த புதிய ஒன்பிளஸ் போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு போன்களும் பட்ஜெட் விலையில் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3 மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 போன்கள் தரமான சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. பின்பு இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3 மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 போன்களின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஒன்பிளஸ் நோர்ட் 3 அம்சங்கள்: 6.74-இன்ச 1.5கே AMOLED டிஸ்பிளேவுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் நோர்ட் 3 போன் அறிமுகமாகும்.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா வசதி இதில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீடியாடெக் டைமன்சிட்டி 9000 சிப்செட் வசதியுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும். அதேபோல் இந்த போனில் 16ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், 5ஜி, 4ஜி வோல்ட்இ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3 போனில் உள்ளன.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 அம்சங்கள்: ஒன்பிளஸ் நோர்ட் சிஇ ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 782ஜி சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும்.பின்பு இந்த போன் 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 900 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும்.
குறிப்பாக 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராவுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 போன் வெளிவரும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, IR பிளாஸ்டர் போன்ற பல அசத்தலான சிறப்பு அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications