Home
Mobile

2 OnePlus போன்கள்.. 1 இயர்பட்ஸ்.. இன்று இந்தியாவில் அறிமுகம்.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் நோர்ட் சீரீஸின் கீழ் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஒரு புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸை இன்று (அதாவது ஜூலை 5 ஆம் தேதி) நடக்கும் வெளியீட்டு நிகழ்வின் வழியாக இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

நோர்ட் சம்மர் லான்ச் (Nord Summer Launch) என்கிற பெயரின் கீழ் நடக்கும் இந்த வெளியீட்டு நிகழ்வு சரியாக எப்போது தொடங்கும்? இதன் லைவ் ஸ்ட்ரீமிங்கை பார்ப்பது எப்படி? அறிமுகம் செய்யப்பட போகும் 2 ஸ்மார்ட்போன்களின் விலை என்ன? அவைகள் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

2 OnePlus போன்கள்.. 1 இயர்பட்ஸ்.. இன்று இந்தியாவில் அறிமுகம்!

நோர்ட் சம்மர் லான்ச் வெளியீட்டு நிகழ்வானது ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலின் வழியாக லைவ் ஸ்ட்ரீமி செய்யப்படும். இந்நிகழ்வு சரியாக இன்று மாலை 7.00 மணிக்கு தொடங்கும். இதுதவிர்த்து ஒன்பிளஸ் நிறுவனமானது தனது சமூக ஊடக சேனல்களின் வழியாக லைவ் அப்டேட்களையும் வெளியிடும்.

இந்நிகழ்வில் மொத்தம் 3 புதிய ஒன்பிளஸ் தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அவைகள் ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி (OnePlus Nord 3 5G), ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி (OnePlus Nord CE 3 5G) மற்றும் ஒன்பிளஸ் பட்ஸ் 2ஆர் (OnePlus Bud 2R) ஆகும்.

ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி விலை மற்றும் அம்சங்கள்: இது ரூ.32,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்சங்களை பொறுத்தவரை, அலெர்ட் ஸ்லைடர், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான பிளாட் டிஸ்பிளே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யும்.

மேலும் இதன் கேமரா செட்டப்பில் சோனி IMX-890 கேமரா சென்சார் இடம்பெறலாம், டிஸ்பிளேவின் மேல் பக்கத்தில் உள்ள ஹோல் பஞ்ச் கட் அவுட்டுக்குள் செல்பீ கேமரா வைக்கப்பட்டுள்ளது. கடைசியாக ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 80W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 5ஜி விலை மற்றும் அம்சங்கள்: இது ரூ.25,000 என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்சங்களை பொறுத்தவரை, இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 782G சிப்செட், 5000mAh பேட்டரி, 80W பாஸ்ட் சார்ஜிங், 120ஹெர்ட்ஸ் அமோஎல்இடி டிஸ்பிளே, ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், அதில் ஓஐஎஸ் சப்போர்ட் உடனான 50-மெகாபிக்சல் சோனி IMX 890 கேமரா சென்சார் போன்றவைகளை வை பேக் செய்யும்.

ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2ஆர்: இது ரூ.2,299 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இது சிலிகான் டிப்ஸ் மற்றும் ஷார்ட் ஸ்டெம்ஸ்களுடன் ஒரிஜினல் நோர்ட் பட்ஸை போன்ற வடிவமைப்பை பெற்றுள்ளது. இதுதவிர்த்து இந்த புதிய ஒன்பிளஸ் இயர்பட்ஸ் ஆனது 12.4 மிமீ டிரைவர்ஸ், ப்ளூடூத் 5.3 ஆதரவு, இயர்பட்ஸ் கேஸுடன் சேர்த்து 38 மணிநேர பேட்டரி லைஃப் போன்ற அம்சங்களை வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 3 OnePlus Nord CE 3 OnePlus Bud 2R India Launch Today July 5 Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X