Home
Mobile

விலை இவளோதானா! இந்தியாவில் அறிமுகமானது OnePlus நோர்ட் 5ஜி போன்.! எப்போது விற்பனை?

ஒன்பிளஸ் நிறுவனம் பட்ஜெட் விலையில் போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் இன்று (5-7-2023) ஒன்பிளஸ் நோர்ட் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போன் ஆனது 6.74-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 1080 பிக்சல்ஸ், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் சிறந்த பாதுகாப்பு வசதியைக் (கார்னிங் கொரில்லா கிளாஸ் 5) கொண்டுள்ளது இந்த போன்.

இந்தியாவில் அறிமுகமானது OnePlus நோர்ட் 5ஜி போன்.! எப்போது விற்பனை?

மீடியாடெக் டைமன்சிட்டி 9000 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போன். எனவே கேமிங், வீடியோ எடிட்டிங் போன்ற பயன்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் மிகவும் அருமையாகப் பயன்படும். பின்பு OxygenOS 13.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

50எம்பி வைடு கேமரா (Sony IMX890 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா (Sony IMX355) + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3 போன். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனின் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும்.

8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது OnePlus நோர்ட் 5ஜி போன்.! எப்போது விற்பனை?

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இந்த விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3ஸ்மார்ட்போன். மேலும் டெம்பஸ்ட் கிரே மற்றும் மிஸ்டி கிரீன் நிறங்களில் இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

8ஜிபி ரேம் மற்றம் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி போனின் விலை ரூ.33,999-ஆக உள்ளது. பின்பு இதன் 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.37,999-ஆக உள்ளது. அமேசானில் ஜூலை 15-ம் தேதி இந்த போன் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 3 launched in India at a price of Rs 33,999: Check Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X