Home
Mobile

கிடுகிடுவென குறைந்த OnePlus 5ஜி போன் விலை.. சோனி கேமரா.. 80W சார்ஜிங்.. 128GB மெமரி.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3) போனுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு இந்தியாவில் ரூ.33,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதுவும் சோனி கேமரா, 80W வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், டைமன்சிட்டி சிப்செட் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் போன் வெளிவந்தது. இப்போது ஒன்பிளஸ் நோர்ட் 3 போனின் புதிய விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

தற்போது ஒன்பிளஸ் நோர்ட் 3 போனுக்கு அமேசானில் 38 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் அமேசான் பிரைம் சந்தாதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.19,999 விலையில் வாங்க முடியும்.

கிடுகிடுவென குறைந்த OnePlus 5ஜி போன் விலை.. சோனி கேமரா.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நோர்ட் 3 அம்சங்கள் (OnePlus Nord 3 specifications): 6.74-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் 2772 X 1240 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 பிளஸ் (HDR 10+), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் சிறந்த பாதுகாப்பு வசதியைக் (Corning Gorilla Glass Victus) கொண்டுள்ளது இந்த போன்.

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 9000 சிப்செட் (MediaTek Dimensity 9000 Chipset) வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போன். எனவே கேமிங், வீடியோ எடிட்டிங் போன்ற பயன்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் மிகவும் அருமையாகப் பயன்படும். பின்பு OxygenOS 13.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டு வெளிவந்தது இந்த போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

கிடுகிடுவென குறைந்த OnePlus 5ஜி போன் விலை.. சோனி கேமரா.. எந்த மாடல்?

குறிப்பாக 50எம்பி மெயின் கேமரா (Sony IMX890 sensor)+ 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா (Sony IMX355) + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3 போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனின் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பும் மிகவும் அருமையாக உள்ளது.

கிடுகிடுவென குறைந்த OnePlus 5ஜி போன் விலை.. சோனி கேமரா.. எந்த மாடல்?

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 80 வாட்ஸ் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் ( 80W SUPERVOOC Fast-charging) வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இந்த விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், என்எப்சி,யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3ஸ்மார்ட்போன். மேலும் டெம்பஸ்ட் கிரே (Tempest Gray)மற்றும் மிஸ்டி கிரீன் (OxygenOS) நிறங்களில் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போனை வாங்கலாம். குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் குறைந்த விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord 3 is available on Amazon for under Rs.20,000 : check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X