Home
Mobile

OnePlus செஞ்சுட்டான்யா.. டைரக்ட்டா ரூ.13,999 தள்ளுபடி.. அடுத்த 3 நாளுக்கு மட்டுமே.. உடனே இதை ஆர்டர் போடுங்க

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் மிட் ரேஞ் மொபைல் சாதனமாக அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3) ஸ்மார்ட்போனின் மீது இப்போது பல்க் ஆஃப்பராக (Bulk Offer) ரூ. 13,999 விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு தள்ளுபடி (Special discount) அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு மட்டுமே கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 20,000 விலைக்கு குறைவான விலையில் இப்போது உங்களால் ஒன்பிளஸ் நோர்ட் 3 சாதனத்தை வாங்கிட முடியும். இந்த சலுகை விலையுடன், இந்த போனை எங்கிருந்து வாங்கலாம் என்ற விபரம் இங்கே.

தெரியாதவர்களுக்கு, ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3) ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்த நேரத்தில் இதன் விலை ரூ. 33,999 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்போது சிறப்பு தள்ளுபடியின் ஒரு பகுதியாக, இதன் விலை ரூ. 20,000-தை விட குறைந்துள்ளது.

OnePlus செஞ்சுட்டான்யா.. டைரக்ட்டா ரூ.13,999 தள்ளுபடி.. 3 நாள் மட்டுமே

ஒன்பிளஸ் நோர்ட் 3 மீது டைரக்ட்டா ரூ.13,999 தள்ளுபடி (Direct Rs 13999 Discount on OnePlus Nord 3):

இந்த திடீர் விலை குறைப்பிற்கு சிறப்பு தள்ளுபடியை தவிர மற்றொரு மறைமுக காரணமும் இருக்கிறது. அது தான் அடுத்த சில தினங்களில் அறிமுகமவிருக்கும் ஒன்பிளஸ் பிராண்டின் புதிய ஒன்பிளஸ் நொர்ட் சிஇ 4 லைட் (OnePlus Nord CE 4 Lite) ஸ்மார்ட்போன் சாதனம். இது ஜூன் 24ம் தேதி அறிமுகமாகிறது. ஆம், இந்த போனின் வருகையை முன்னிட்டு இதன் விலை இந்திய சந்தையில் சரிவை சந்தித்துள்ளது.

இருப்பினும், ஒரே மூச்சில் ரூ. 13,999 என்ற சிறப்பு தள்ளுபடி தற்போது நடைபெறும் அமேசான் மான்சூன் மொபைல் மேனியா சேல்ஸ் (Amazon Monsoon Mobile Mania sale) விற்பனையின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்பதை தெளிவாக தெரிவித்துக்கொள்கிறோம். இந்த அமேசான் சிறப்பு விற்பனை தற்போது லைவில் உள்ளது. இது வரும் ஜூன் 25, 2024 ஆம் தேதி வரை மட்டுமே நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விற்பனை காலத்திற்கு இடையே நீங்கள் ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போன் சாதனத்தை வாங்க திட்டமிட்டால், ரூ. 13,999 தள்ளுபடியை பெற்று, இந்த போனை ரூ. 19,999 என்ற விலையில் வாங்கி மகிழலாம். கூடுதலாக இதன் மீது சில வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுக்கு 10% சலுகை எக்ஸ்டரா கிடைக்கிறது. ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3) ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 33,999 ஆகும்.

ரூ. 19,999 விலைக்கு இது பெஸ்ட் போனா? நம்பி வாங்கலாமா?

அதிரடி விலை குறைப்பிற்கு பிறகு, இந்த போன் தற்போது ரூ.20,000 பட்ஜெட் செக்மெட் கீழ் தள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.35,000 விலை செக்மென்ட்டில் இருந்த சாதனம், இப்போது ரூ.20,000 விலை செக்மென்ட்டில் வந்துள்ளதால், இது தற்போது இந்த செக்மென்ட்டில் வாங்க கிடைக்கும் ஆகச்சிறந்த பெஸ்ட் ஸ்மார்ட்போனாக திகழ்கிறது. ரூ. 20,000-திற்குள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3) ஒரு வரப்பிரசாதமாக மாறியுள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus Nord 3 Gets Rs 13999 Discount On Amazon Monsoon Mobile Mania Sale 2024 Buy Now For Rs 19999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X