கொட்டுது ஆர்டர்.. முழுசா ரூ.3,750 கட்.. வெறும் ரூ.23,248 போதும்.. AMOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. எந்த மாடல்?
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 (OnePlus Nord CE 3) போனுக்கு ரூ.1,500 கூப்பன் டிஸ்கவுண்ட் மட்டுமல்லாமல், ரூ.2,250 பேங்க் டிஸ்கவுண்ட்டும் கொடுக்கப்படுவதால், அறக்க பறக்க ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த விவரம் இதோ.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 அம்சங்கள் (OnePlus Nord CE 3 Specifications): இந்த நோர்ட் மாடலில் 6.74 இன்ச் (1080 x 2400 பிச்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

அதேபோல 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) மற்றும் 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் வருகிறது. மொத்தமாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொண்டுள்ளது.
இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 (OxygenOS 13.1) கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 782ஜி 6என்எம் மொபைல் ஸ்னாப்டிராகன் (Octa Core Snapdragon 782G 6nm Mobile) சிப்செட் மற்றும் அட்ரினோ 642எல் ஜிபியு (Adreno 642L GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
இந்த ஒன்பிளஸ் மாடலில் 8ஜிபி ரேம் +128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த போனில் பக்காவான சென்சார்கள் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சாருடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது.

இதுவொரு ஓஐஎஸ் மாடலாகும். இந்த கேமராவில் லோவ்-லைட் போட்டோகளை கிரிஸ்டல் கிளியராக எடுக்க டர்போராவ் (TurboRAW) அல்கோரிதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. போர்ட்ராய்டு, நைட்ஸ்கேப் மோட் போன்ற பீச்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் வருகிறது. IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனில் 80W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப் - சி சார்ஜிங் போர்ட் வருகிறது. மொத்தமாக 184 கிராம் எடை கொண்டுள்ளது. 5ஜி, டூயல் 4ஜி, ப்ளூடூத் 5.2, வை-பை 6, நாவ்ஐசி மற்றும் ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் கொண்டிருக்கிறது.
இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 மாடலில் அக்வா சர்ஜ் (Aqua Surge) மற்றும் கிரே சிம்மெர் (Grey Shimmer) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த ஒன்பிளஸ் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.26,998 ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.28,998ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலையில், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை முன்னிட்டு நம்ப முடியாத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் 8 ஜிபி மாடலுக்கு ரூ.1,500 கூப்பன் டிஸ்கவுண்ட்டும், ரூ.2,250 பேங்க் டிஸ்கவுண்ட்டும் கொடுக்கப்படுகிறது. இதை ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெறலாம். ஆகவே, இந்த மாடலை வெறும் ரூ.23,248க்கு வாங்கிக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








