Home
Mobile

இனிமே யாரு விடுவா? ரூ.25,000 விலையில் ஒன்பிளஸ் நோர்ட் போன்.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி வேற!

ஒன்பிளஸ் நோர்ட் சீரிஸ் மாடல்களிலேயே முதல்முறையாக ரூ.26,999 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 (OnePlus Nord CE 3) போன், இப்போது அமேசானில் (Amazon) அறிமுக சலுகையில் மேலும் குறைவான விலைக்கு வந்துள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

இந்தியாவில் ஆப்பிள், சாம்சங் போன்களுக்கு அடுத்தபடியாக ஒன்பிளஸ் போன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதிலும், ஒன்பிளஸ் நோர்ட் சீரிஸ் போன்களுக்கான வரவேற்பனை பற்றி அதன் விற்பனை நிலவரங்களே வெளிச்சம் போட்டுக்காட்டிவிட்டன. இருப்பினும், இந்த நோர்ட் சீரிஸ் போன்கள் மிட்-ரேஞ்ச் விலையில் விற்பனைக்கு வந்ததால், வாங்க விருப்பம் இருக்கும் பலரும் ஆர்டர் போடுவதை தள்ளிப்போட்டு வருகின்றனர்.

கப்சிப்னு வாங்குவீங்க.. ஆஃபர் அப்படி.. அனல் பறக்கும் ஒன்பிளஸ் விற்பனை!

இவர்களுக்கு பொன்னான வாய்ப்பு வந்துவிட்டது. இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 போன், இன்று முதல் (ஆகஸ்ட் 4) விற்பனைக்கு வந்துள்ள நிலையில், அந்த போனுக்கு பல்வேறு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி மூலம் பட்ஜெட் விலையில், அந்த போனை வாங்கிக்கொள்ள முடியும். இந்த போனின் அம்சங்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்கள், பின்வருமாறு.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 அம்சங்கள் (OnePlus Nord CE 3 Specifications): இந்த ஒன்பிளஸ் போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் (Qualcomm Snapdragon 782G) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு, ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 (OxygenOS 13.1) மற்றும் அட்ரினோ 642எல் ஜிபியு (Adreno 642L GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த போனின் டிஸ்பிளே 6.74 இன்ச் (1080 x 2400 பிச்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) ஸ்கிரீன் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வருகிறது.

இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட் இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் போனானது, 8 ஜிபி ரேம் +128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 மாடல்களில் விற்பனைக்கு வருகிறது. இதோடு மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் குறிப்பிடத்தக்க அம்சமாக 80W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.

இந்த சூப்பர்வூக் சார்ஜிங் மூலம் வெறும் 15 நிமிடங்களில் பேட்டரியை ஃபுல் சார்ஜ் செய்து கொள்ள முடியும். இந்த ஒன்பிளஸ் போனின் கேமரா டிரிபிள் ரியர் செட்டப் கொண்டிருக்கிறது. ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் செட்டப் வருகிறது.

16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. மேலும், டூயல் நானோ சிம், டைப் - சி போர்ட், இன் - டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர், என்எஃப்சி, ப்ளூடூத் 5.3 உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஒன்பிளஸ் போன் அக்வா சர்ஜ் (Aqua Surge) மற்றும் கிரே சிம்மெர் (Grey Shimmer) ஆகிய இரண்டு கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

இந்த ஒன்பிளஸ் போனின் விலையை பொறுத்தவரையில் நோர்ட் சீரிஸ் மாடல்களிலேயே மலிவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.26,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.28,999ஆகவும் இருக்கிறது.

இந்த போன் இன்று (ஆகஸ்ட் 4) அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. அதோடு தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனுக்கு அறிமுக சலுகையாக ரூ.2,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். ஆகவே, முதல்முறையாக நோர்ட் சீரிஸ் போனை ரூ.25,000 பட்ஜெட்டில் வாங்கிக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், ஐசிஐசிஐ பேங்க் மற்றும் ஒன்கார்டு அட்டைதாரர்களுக்கு 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் இஎம்ஐ வழங்கப்படுகிறது. அதோடு ரூ.2000 வரையில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 3 CE 5G Sale Start On Amazon in India Check Specifications, Price, Launch Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X