Home
Mobile

அடேங்கப்பா.. என்னா வேகம்.. மீண்டும் ஒரு 5ஜி போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் OnePlus.! என்ன மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் தான் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த புதிய போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு அசத்தலான ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

அதாவது ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்பேர்து இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் இணையதளத்தில் காணப்பட்டது. எனவே இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் உடன் ஒரு இயர்பட்ஸ் மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மீண்டும் ஒரு 5ஜி போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் OnePlus.! என்ன மாடல்?

இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி, இந்த மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் தொடக்கத்தில் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

விரைவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்து. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த போன் பெரிய டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 9000 சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் குறிப்பாக கேமிங் பயனர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாகப் பயன்படும். பின்பு OxygenOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி போன் வெளிவரும்.

மீண்டும் ஒரு 5ஜி போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் OnePlus.! என்ன மாடல்?

இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் வெளிவரும் இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்.

புதிய ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேக்கப் வழங்கும். குறிப்பாக இந்த போனில் நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். அதேபோல் 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போன்.

மீண்டும் ஒரு 5ஜி போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் OnePlus.! என்ன மாடல்?

மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளன இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி மாடல் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 3 5G will be launched at the end of this month: Check Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X