Home
Mobile

லீக்கான புது மாடல்.. மரண வெயிட்டிங் மோடில் OnePlus பிரியர்கள்.. அப்படியென்ன இருக்கு?

இந்தியாவில் ஆப்பிள் (Apple), சாம்சங் (Samsung) போன்களுக்கு அடுத்தப்படியாக ஒரு போனுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றால், அது ஒன்பிளஸ் (OnePlus) போன்களுக்காக மட்டுமேயென்று சொல்லலாம். ஏனென்றால், இந்த ஒன்பிளஸ் போன்களின் டிசைன், கேமரா அம்சங்கள் வியக்கும்படி இருக்கும்.

அதேபோல மற்ற அம்சங்களையும் சும்மானு என்று சொல்லிவிட முடியாது, தரமாக இருக்கும். இதனாலேயே, புதிதாக வெளியாக இருக்கும் ஒன்பிளஸ் மாடல்களுக்காக அதன் பிரியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகள் உடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், விரைவில் வெளியாக இருக்கும் ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி (OnePlus Nord 3 5G) போனுக்கான எதிர்பார்ப்பு என்பது சற்றும் குறையாமல் இருந்து வருகிறது.

லீக்கான புது மாடல்.. மரண வெயிட்டிங் மோடில் OnePlus பிரியர்கள்!

இப்படிப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி போனின் அம்சங்கள் கீக்பெஞ்ச் (Geekbench) வெப்சைட்டில் கசிந்துள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 9000 எஸ்ஓசி சிப்செட், 8 ஜிபி ரேம் உடன் 12 ஜிபி விர்ச்சுவல் ரேம், 5000 mAh பேட்டரி என அம்சங்களில் பின்னி எடுக்கிறது. இந்த போனின் விலை மிட்-ரேன்ஞ் போன்களைவிட சற்று அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி போன் குறித்து கசிந்துள்ள முழு அம்சங்களை, இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி போனின் கசிந்துள்ள அம்சங்கள்: இந்த போன் 6.74 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. எச்டிஆர்10+ (HDR10+) சப்போர்ட்டுடன் 1450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

மாலி ஜி710 ஜிபியு (Mali G710 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 13 உடன் மீடியாடெக் டைமன்சிட்டி 9000 எஸ்ஓசி (MediaTek Dimensity 9000 SoC) சிப்செட் வருகிறது. அதோடு ஆக்ஸிஜன்ஓஎஸ் 13 (OxygenOS 13) வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் என 2 வேரியண்ட்டுகளில் வருகிறது. அதுமட்டுமல்லாமல், 12 விர்ச்சுவல் ரேம் இருக்கிறது.

50 எம்பி மெயில் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் கொண்ட டிரிபிள் செட்டப் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. இந்த கேமராக்களின் சென்சார்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உடன் 5000mAh பேட்டரி வருகிறது.

இந்த போனின் விலை ரூ.30,000 அல்லது ரூ.32,000 ஆக நிர்ணயிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord 3 5G Specifications Leaked on Geekbench with MediaTek Dimensity 9000 SoC and 16GB RAM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X