இந்தியாவுக்கு வரும் புதிய ஒன்பிளஸ் போன்: ஆன்லைனில் கசிந்த விலை.!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஆனது அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
குறிப்பாக இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஏற்கனவே கசிந்த நிலையில், தற்போது இந்த போனின் விலையும் ஆன்லைனில்
கசிந்துள்ளது. அதன்படி ரூ.30,000 விலையில் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்து. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த போன் பெரிய டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மர்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 9000 சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் குறிப்பாக கேமிங் பயனர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாகப் பயன்படும். பின்பு OxygenOS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி போன் வெளிவரும்.
ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் வெளிவரும் இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளன இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் குறைந்த எடையுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய போனின்
வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுனம்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








