Home
Mobile

OnePlus நியூ இயர் சர்ப்ரைஸ்.. 256GB மெமரி.. 50MP கேமரா.. 80W சார்ஜிங்.. நோர்ட் போனுக்கு விலைகுறைப்பு..

ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போனுக்கு விலையை குறைத்துள்ளது. குறிப்பாக டைமன்சிட்டி சிப்செட், ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் பல அசத்தலான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது. மேலும் இப்போது ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி போனின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி போன் ரூ.33,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்ட விலை குறைப்பு மூலம் இந்த 8ஜிபி ரேம் கொண்ட மாடலை ரூ.29,999 விலையில் வாங்க முடியும். அதேபோல் இதன் 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் முன்பு ரூ.37,999 விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்ட விலை குறைப்பு மூலம் ரூ.33,999-க்கு வாங்க முடியும்.

OnePlus நியூ இயர் சர்ப்ரைஸ்..நோர்ட் போனுக்கு விலைகுறைப்பு..

ஒன்பிளஸ் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ஒன்பிளஸ் ஸ்டோர் மொபைல் செயலி மூலம் விலை குறைக்கப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் 5ஜி போனை வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் டெம்பஸ்ட் கிரே மற்றும் மிஸ்டி கிரீன் நிறங்களில் ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி கிடைக்கிறது.

ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி அம்சங்கள் (OnePlus Nord 3 5G specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 9000 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் ழுஒலபநெழுளு 13.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் 8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 50எம்பி வைடு கேமரா (Sony IMX890 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா (Sony IMX355) + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் அமைப்பு மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

OnePlus நியூ இயர் சர்ப்ரைஸ்..நோர்ட் போனுக்கு விலைகுறைப்பு..

6.74-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் 3 . மேலும் 2772 X 1240 பிக்சல்ஸ், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் சிறந்த பாதுகாப்பு வசதியைக் (கொரில்லா கிளாஸ் விக்டஸ்) கொண்டுள்ளது இந்த போன்.

அதேபோல் 5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 3 5G price cut in India: check new price, specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X