ரூ.18,498-க்கு விற்கப்படும் ரூ.34,000 போன்.. இந்த OnePlus Phone-ஐ வாங்க இதான் சரியான டைம்.. என்ன மாடல்?
அறிமுகமாகி கிட்டத்தட்ட 1 ஆண்டுகள் கழித்து.. சரியாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் 5ஜி (OnePlus Nord CE 4 Lit 5G) ஸ்மார்ட்போன் ஆனது இந்திய சந்தையில் அறிமுகமாகும் நேரத்தில்.. ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி (OnePlus Nord 3 5G) ஸ்மார்ட்போனின் மீது பெரிய அளவிலான தள்ளுபடி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஜூலை மாதத்தில் ரூ.35,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஆனது தற்போது அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது.
அமேசானின் இந்த லிமிடெட் டைம் டீலின் கீழ் ஒன்பிளஸ் நோர்ட் 3 மாடலை மிகவும் குறைந்த விலைக்கு வாங்குவது எப்படி? புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை வாங்கும் ஐடியா உங்களிடம் இருந்தால்.. அதிலும் குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் 3 மாடலின் மீது உங்களுக்கு கண் இருக்கிறது என்றால்.. அதை வாங்குவதற்கான சிறந்த நேரம் இதுதான்.

ஜூன் 25 ஆம் தேதியோடு முடிவடையும் அமேசானின் மான்சூன் மொபைல் மேனியா விற்பனையின் (Amazon Monsoon Mobile Mania sale) ஒரு பகுதியாக ஒன்பிளஸ் நோர்ட் 3 மாடல் ஆனது எந்த விதமான பிரத்யேக அல்லது சிறப்பு தள்ளுபடியும் இல்லாமல்.. நேரடியாக ரூ.19,998 க்கு வாங்க கிடைக்கிறது
ஒருவேளை உங்களிடம் அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு (Amazon Pay ICICI Credit card) இருந்தால், ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கிய பிறகு சுமார் ரூ.1,000 கூடுதல் கேஷ்பேக்கையும் பெறலாம். இதன்மூலம் ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போனின் விலையை ரூ.18,998 ஆக குறைக்க முடியும்.
எங்களிடம் கேட்டால் இதுவே ஒரு அற்புதமான ஆபர் விலை ஆகும். ஒருவேளை உங்களிடம் அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு இல்லை என்றால் மாறாக டிபிஎஸ் கிரெடிட் கார்டு (DBS Credit Card) இருந்தால், உங்களுக்கு உடனடியாக ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போனை ரூ.18,498 க்கு வாங்க முடியும்.
நினைவூட்டும் வண்ணம், அறிமுகத்தின் போது ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.33,999 க்கு வெளியானது. அதே சமயம் 16ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.37,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது 11 மாதங்களுக்கு பிறகு இது ரூ.20,000 க்குள் என்கிட்ட விலையில் வாங்க கிடைக்கிறது.
ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.74 இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 9000 சிப்செட் (MediaTek Dimensity 9000 Chipset) மற்றும் 16ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஆனது 50 எம்பி ப்ரைமரி வைட் கேமரா + 8 எம்பி 112-டிகிரி அல்ட்ரா-வைட் கேமரா + 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 எம்பி செல்பீ கேமரா உள்ளது.
சாஃப்ட்வேரை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்சிஜன்ஓஎஸ் 13 உடன் அனுப்பப்பட்டது. இப்போது இது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 14-க்கு அப்டேட் ஆகியுள்ளது. கடைசியாக இது 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications