விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போன்.! முழு விவரம்.!

|

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போன் வரும் மே 19-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் நோர்ட் 2டி

ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவரும். பின்பு90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி பணி நீக்கத்தில் டுவிட்டர் சிஇஓ பராக்.,டுவிட்டர் வாங்கும் ஒப்பந்தம் நிறுத்தி வைத்த மஸ்க்: என்ன நடக்கிறதுஅதிரடி பணி நீக்கத்தில் டுவிட்டர் சிஇஓ பராக்.,டுவிட்டர் வாங்கும் ஒப்பந்தம் நிறுத்தி வைத்த மஸ்க்: என்ன நடக்கிறது

ஒன்பிளஸ் நோர்ட் 2டி

ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 1300 சிப்செட் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் Oxygen OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தமில்லாமல் சாம்சங் அறிமுகம் செய்த கூலான Samsung Galaxy Tab S6 Lite (2022)..விலை என்ன தெரியுமா?சத்தமில்லாமல் சாம்சங் அறிமுகம் செய்த கூலான Samsung Galaxy Tab S6 Lite (2022)..விலை என்ன தெரியுமா?

ஒன்பிளஸ் நோர்ட் 2டி

ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமமரி வசதி கொண்டு வெளிவரும். மேலும் கேம் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அடடா இது தெரியாம போச்சே! ரூ.200க்குள் கிடைக்கும் பட்ஜெட் பிரெண்ட்லி திட்டங்கள்.. உடனே ரீசார்ஜ் செய்யுங்கள்..அடடா இது தெரியாம போச்சே! ரூ.200க்குள் கிடைக்கும் பட்ஜெட் பிரெண்ட்லி திட்டங்கள்.. உடனே ரீசார்ஜ் செய்யுங்கள்..

ஒன்பிளஸ் நோர்ட் 2டி

ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி Sony IMX766 பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

முழு சந்திர கிரகணம் 2022: மே 16 வானில் தெரியும் பிளட் மூன்- எத்தனை மணிக்கு, எப்படி நேரில் பார்ப்பது!முழு சந்திர கிரகணம் 2022: மே 16 வானில் தெரியும் பிளட் மூன்- எத்தனை மணிக்கு, எப்படி நேரில் பார்ப்பது!

, 50 வாட் AirVOOC வயர்லெஸ் பாஸ்ட்

ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு, 50 வாட் AirVOOC வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

Google Wallet app விரைவில் 40 நாடுகளில் அறிமுகம்.. Google Payக்கும் இதற்கும் என்ன பெரிய வித்தியாசம்?Google Wallet app விரைவில் 40 நாடுகளில் அறிமுகம்.. Google Payக்கும் இதற்கும் என்ன பெரிய வித்தியாசம்?

ன்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ,

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட்,என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனம் ரூ.30,000-விலையில் அறிமுகம் செய்யப்படும் என்றுஏற்கனவே தகவல் வெளிவந்துள்ளன.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord 2T with 50 Mega Pixel Camera Launching in India on May 19: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X