ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போனின விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போன் மாடலின் விலை EUR 399 (இந்திய மதிப்பில் ரூ.32,100) ஆக உள்ளது.மேலும் கருப்பு மற்றும் பச்சை நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 1300 சிப்செட் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் Oxygen OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமமரி வசதி கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் கேம் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி Sony IMX766 பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மோனோக்ரோம்
சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக்
கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ஒன்பிளஸ் நோர்ட் 2டி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 80 வாட் 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு, 50 வாட் AirVOOC வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட்,என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக்
உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications