விரைவில்: அசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் நோர்ட் 2.!
ஒன்பினஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனம் அசத்தலான சிப்செட் வசதியுடன் வெளிவரும். தற்போது இந்த சாதனத்தின் சில அம்சங்கள் ஆன்லைனில்
கசிந்துள்ளது,அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்ப வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆக்டோ-கோர் மீடியாடெக்
Dimensity 1200 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.
அதேபோல் இந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 மாடலின் பின்புறம் 50எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, 4500 எம்ஏஎச் பேட்டரி உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போன். அண்மையில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 5ஜி பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி மாடல். இந்தியாவில் கூடிய விரைவில் 5ஜி சேவை வரும் என்பதால் இந்த ஸ்மார்ட்போன் சரியான விலையில் 5ஜி உட்பட அனைத்து அமசங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் OxygenOS 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 30டி பிளஸ் வார்ப் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். எனவே 30 நிமிடங்களில் 70 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.மேலும் Blue Void (matte), Charcoal Ink (glossy), Silver Ray நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த சாதனம்.

5 ஜி, டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 அ / பி / ஜி / என் / ஏசி, டூயல் பேண்ட், வைஃபை டைரக்ட்,ஹாட்ஸ்பாட், ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், க்ளோனாஸ், டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி
ஸ்மார்ட்போன் மாடல்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி விலை
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி மாடலின் விலை ரூ.22,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி மாடலின் விலை ரூ.24,999-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி மாடலின் விலை ரூ.27,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications