Home
Mobile

இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 2 பேக் மேன் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஒன்பிளஸ் நிறுவனம் இருட்டில் ஒளிரும் நியான் பேக் பேனலுடன் கூடிய புதிய நோர்ட் 2 பேக் மேன் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இணையதளங்களில் வாங்க கிடைக்கிறது. அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போன் நோர்ட் 2 ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PAC-MAN லோகோ

அதேபோல் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஸ்மார்ட்போனில் PAC-MAN கேமால் ஈர்க்கப்பட்ட ஒரு கஸ்டம் தீம், UI அனிமேஷன்கள் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனத்தில் ப்ரீ-டூ-பிளே Pac-MAN 256 கேமும் ப்ரீ-இன்ஸ்டால்டு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ஒன்பிளஸ் நோர்ட் 2 பேக் மேன் ஸ்பெஷல் எடிஷன் மாடலின் பின்புறம் PAC-MAN லோகோ மற்றும் கேமில் பேக்-மேன் என்கிற கதாபாத்திரம் உட்கொள்ளும் சிறிய புள்ளிகளையும் காண முடிகிறது. அதேபோல் இந்த சாதனத்தின் பேக் பேனல் இருட்டில் ஒளிரவும் செய்கிறது.

ஒன்பிளஸ் நோர்ட் 2 பேக் மேன்

ஒன்பிளஸ் நோர்ட் 2 பேக் மேன் ஸ்பெஷல் எடிஷன் ஆனது 6.4-இன்ச் எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் எச்டிஆர் பிளஸ் ஆதரவு, 90Hz ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

ன் மாடலில்

குறிப்பாக இந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 பேக் மேன் எடிஷன் மாடலில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மீடியா டெக் டைமன்சிட்டி 1200-AI சிப்செட் வசதி உள்ளது. அதாவது சில ஒப்போ, ரியல்மி ஸ்மார்ட்போன்களில் கூட இதே சிப்செட் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன்ஓஎஸ் 11.3 (topped with ColorOS) கொண்டு இயங்குகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் 2 பேக் மேன் எடிஷன்

ஒன்பிளஸ் நோர்ட் 2 பேக் மேன் எடிஷன் மாடலின் பின்புறம் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ் பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மோனோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர நைட்ஸ்கேப் அல்ட்ரா மோட்,போர்ட்ரெயிட் மோட், நைட் போர்ட்ரெயிட் மோட், டூயல் வியூ வீடியோ, 4கே வீடியோ பதிவு ஆதரவு என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

நோர்ட் 2 பேக் மேன் எடிஷன் மாடலில்

ஒன்பிளஸ் நோர்ட் 2 பேக் மேன் எடிஷன் மாடலில் 4500 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம். எனவே இது வெறும் 30 நிமிடங்களில் 0 சதவீதத்திலிருந்து 100 சதவீதத்தை எட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் நோ

வைஃபை 6, 5ஜி, 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், டூயல் ஸ்பீக்கர்கள், ஹாப்டிக்ஸ் 2.0, இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர், ஃபேஸ் அன்லாக், ப்ளூடூத் வெர்ஷன் 5.2 உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் 2 பேக் மேன் ஸ்பெஷல் எடிஷன்
மாடல்.

12ஜிபி ரேம் மற்றும 256ஜிபி

12ஜிபி ரேம் மற்றும 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் 2 பேக் மேன் எடிஷன் ஸ்மார்ட்போனின்விலை ரூ.37,999-ஆக உள்ளது. பின்பு இந்த சாதனத்தை அமேசான் வலைத்தளத்தில் வாங்கும் பயனர்களுக்கு குறிப்பிட்ட சலுகையும் கிடைக்கும்

Best Mobiles in India

English summary
OnePlus Nord 2 Pac-Man Edition Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X