தரமான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போன்.!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு சாதனமும் தனித்துவமான வசதிகளுடன் வெளிவருகின்றன. இந்நிலையில் ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போனின் சில தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் 2
வெளிவந்த தகவலின் அடிப்படையில், ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 1200 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தி சிப்செட் வசதி கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக செயல்படும்.

அதேபோல் ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே வசதியுடன் ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும்
என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் நோர்ட்
ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் முழு எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 180Hz திரை மாதிரி விகிதம் இடம்பெற்றுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம்செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

இந்த ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 620ஜிபியு வசதியும் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்குமிகவும் அருமையாக இருக்கும்.

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி சோனி சென்சார்+8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 5எம்பி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 32எம்பி + 2எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்ட செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மற்ற ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ள அதே கேமராக்கள் தான் இதிலும் இடம்பெற்றுள்ளது. மேலும் இரவு நேரங்களில் கூட இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தி துல்லியமான புகைப்படங்களை எடுக்கமுடியும்.

ஒன்பிளஸ் நோர்ட் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மற்றஸ்மார்ட்போன்களை விட தனித்துவமான டிஸ்பிளே மற்றும் மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

வைஃபை, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ், க்ளோனாஸ், நாவிக், டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்புஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications