ஓபன் சேல் விற்பனையில் ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன்.!
இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தற்போது ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட நோர்ட் 2 மாடல் பிரைம் டே விற்பனையின்போது அமேசான்
பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே வாங்க கிடைத்தது. ஆனால் தற்போது ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

எனவே இப்போது பிரைம் மெம்பர்களாக இல்லாதவர்கள் கூட அமேசான் வழியாக ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சாதனத்தை வாங்க முடியும். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த ஸ்மார்ட்போனை அனைத்து பயனர்களுக்கும் வாங்குவதற்கு கிடைக்கிறது.

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி விலை
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.27,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.34,999-ஆக உள்ளது.

மேலும் இந்த சாதனத்திற்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து பார்க்கையில், எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு பரிவர்த்தனைக்கு ரூ.1000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். பின்பு கிரே சியரா, ப்ளூ ஹேஸ் மற்றும் கிரீன் வூட் நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி சாதனம்.

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக்கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 1200-AI SoC சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் OxygenOS 11.3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 2எம்பி மோனோ லென்ஸ் என மொத்தம்
மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமராஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக 4 கே வீடியோக்கள், நைட்ஸ்கேப் அல்ட்ரா பயன்முறை, AI மேம்பாடுகள்,
போர்ட்ரெயிட் மோட், நைட் போர்ட்ரெயிட் மோட், டூயல் வியூ வீடியோ மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாதனம். எனவே வெறும் 30 நிமிடங்களில் 0 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது


Click it and Unblock the Notifications