Home
Mobile

விரைவில் அறிமுகமாகும் அசத்தலான ஒன்பிளஸ் நோர்ட் 2 சிஇ ஸ்மார்ட்போன்.!

ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் புதிய ஒன்பிளஸ் நோர்ட் 2 சிஇ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனின் கசிந்த இந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 சிஇ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் நோர்ட் 2 சிஇ

ஒன்பிளஸ் நோர்ட் 2 சிஇ

ஒன்பிளஸ் நோர்ட் 2 சிஇ ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஒன்பிளஸ் நோர்ட் 2 சிஇ

இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் 2 சிஇ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 900 SoC சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கும் இந்த ஸ்மார்ட்போன் மிக அருமையாக பயன்படும்.

ஒன்பிளஸ் நோர்ட் 2 சிஇ

ஒன்பிளஸ் நோர்ட் 2 சிஇ ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் 2  சிஇ

ஒன்பிளஸ் நோர்ட் 2 சிஇ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதேபோல் 4500 எம்ஏஎச் பேட்டரி
மற்றும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்நிறுவனத்தின் ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 1200-AI SoC சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் OxygenOS 11.3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 2எம்பி மோனோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக 4 கே வீடியோக்கள், நைட்ஸ்கேப் அல்ட்ரா பயன்முறை, AI மேம்பாடுகள், போர்ட்ரெயிட் மோட், நைட் போர்ட்ரெயிட் மோட், டூயல் வியூ வீடியோ மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாதனம். எனவே வெறும் 30 நிமிடங்களில் 0 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

டூயல் ஸ்பீக்கர்கள்

டூயல் ஸ்பீக்கர்கள், ஹாப்டிக்ஸ் 2.0, இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர், ஃபேஸ் அன்லாக், 5ஜி, 4ஜி எல்டிஇ, என்எப்சி, ப்ளூடூத் வெர்ஷன் 5.2, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் கிரே சியரா,
ப்ளூ ஹேஸ் மற்றும் க்ரீன் வூட் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord 2 CE May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X