அசத்தலான ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை?
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனம் ஜூலை 26-ம் தேதி அமேசான், ஒன்பிளஸ்.இன் உள்ளிட்ட வலைத்தளங்களில் விற்பனைக்கு வரும். மேலும் ஒன்பிளஸ் நோர்ட் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

Fluid AMOLED டிஸ்பிளே
ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்

மீடியாடெக் Dimensity 1200-AI SoC சிப்செட்
ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 1200-AI SoC சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் OxygenOS 11.3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

50எம்பி பிரைமரி சென்சார்
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 2எம்பி மோனோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக 4 கே வீடியோக்கள், நைட்ஸ்கேப் அல்ட்ரா பயன்முறை, AI மேம்பாடுகள், போர்ட்ரெயிட் மோட், நைட் போர்ட்ரெயிட் மோட், டூயல் வியூ வீடியோ மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

4500 எம்ஏஎச் பேட்டரி
ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாதனம். எனவே வெறும் 30 நிமிடங்களில் 0 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

டூயல் ஸ்பீக்கர்கள், ஹாப்டிக்ஸ் 2.0, இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர், ஃபேஸ் அன்லாக், 5ஜி, 4ஜி எல்டிஇ, என்எப்சி, ப்ளூடூத் வெர்ஷன் 5.2, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் கிரே சியரா, ப்ளூ ஹேஸ் மற்றும் க்ரீன் வூட் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.27,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.34,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








