Home
Mobile

கச்சேரி ஆரம்பம்.. கனவு விலையில் புதிய OnePlus 5G போன்.. அனல் பறக்க போகும் விற்பனை!

"ஒரு ஒன்பிளஸ் போன் வாங்கணும்.. ஆனால் ரூ.60,000 அல்லது ரூ.50,000 செக்மென்ட்லாம் எனக்கு செட் ஆகாது!" என்று கூறும் பட்ஜெட் வாசிகளை குறிவைத்து வெளியானதே ஒன்பிளஸ் நோர்ட் சீரீஸ் (OnePlus Nord Series). இந்த சீரீஸின் கீழ் பல வகையான பட்ஜெட் மற்றும் மிட்-ரேன்ஜ் போன்கள் அறிமுகமாகி உள்ளன!

ஆனால் இதுவரை வெளியான மாடல்கள் எல்லாம் சும்மா 'ட்ரையல்' மாதிரி தான்.. இதுதான் ஒன்பிளஸின் உண்மையான மிட்-ரேன்ஜ் போனாக இருக்கும் என்று கூறும் அளவிற்கு ஒரு புதிய நோர்ட் சீரீஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதுவும் 5ஜி ஆதரவுடன்!

கச்சேரி ஆரம்பம்.. கனவு விலையில் புதிய OnePlus 5G போன்!

அதென்ன ஸ்மார்ட்போன்? அது என்ன விலைக்கு அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? சரியாக எப்போது அறிமுகமாகும்? போன்ற விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்!

அது OnePlus Nord 3 5G ஸ்மார்ட்போனாகும்!

ஆம்! ஒன்பிளஸ் நிறுவனம் அதன் நோர்ட் சீரீஸின் கீழ் ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை என்றாலும் கூட எங்களிடம் ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம், அம்சங்கள் மற்றும் அறிமுக தேதி குறித்த லீக் தகவல்கள் உள்ளன.

OnePlus Nord 3 போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

கிடைக்கப்பெற்ற லீக் தகவலின்படி இது ஃபுல் எச்டி+ ரெசல்யூஷனுடன் 6.5-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். மேலும் இதன் டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டையும் ஆதரிக்கலாம்.

கச்சேரி ஆரம்பம்.. கனவு விலையில் புதிய OnePlus 5G போன்!

சிப்செட்டை பொறுத்தவரை, இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 (MediaTek Dimensity 8100) அல்லது டைமன்சிட்டி 8200 (Dimensity 8200) ப்ராசஸர் இடம்பெறலாம். ஒருவேளை நோர்ட் 3 போனில் டைமன்சிட்டி 8200 இடம்பெற்றால் அதுவொரு நல்ல மேம்பாடாக இருக்கும்.

ஏனென்றால், இது மீடியாடெக் நிறுவனத்தின் லேட்டஸ்ட் சிப்செட் ஆகும் மற்றும் 5என்எம் செயல்பாட்டில் உருவாக்கப்பட்ட ஒரு நல்ல சிப்செடும் கூட!

OnePlus Nord 3 போனில் என்ன மாதிரியான கேமராக்கள் & பேட்டரியை எதிர்பார்க்கலாம்?

கேமராக்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) இடம்பெறலாம்.

கச்சேரி ஆரம்பம்.. கனவு விலையில் புதிய OnePlus 5G போன்!

அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடனான 50எம்பி மெயின் கேமராவையும், 8எம்பி அல்ட்ராவைட் கேமராவையும் எதிர்பார்க்கலாம். மூன்றாவது கேமரா குறித்து தகவல் இல்லை. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக இதில் 32எம்பி செல்பீ கேமரா பேக் செய்யப்படலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் 3 ஸ்மார்ட்போனில் 4,500mAh அல்லது 5000mAh பேட்டரி இடம்பெறலாம். மேலும் இந்த பேட்டரி 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் பெறலாம்.

கச்சேரி ஆரம்பம்.. கனவு விலையில் புதிய OnePlus 5G போன்!

OnePlus Nord 3 5G போன் எப்போது, என்ன விலைக்கு அறிமுகமாகும்?

ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் கண்டிப்பாக ரூ.30,000 க்குள் தான் இருக்கும். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இது ரூ.27,999 க்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுக தேதியை பொறுத்தவரை, வருகிற 2023 ஜூன் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.

Best Mobiles in India

English summary
OnePlus Next Mid Range 5G Phone OnePlus Nord 3 Expected Specifications Price and Launch Date in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X