Home
Mobile

என்ன சோனா முத்தா போச்சா. . OnePlus-ன் 1 லட்ச ரூபாய் போன்!

ரூ.1,39,999 க்கு அறிமுகமான ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை உங்களில் பலரும் மறந்து இருப்பீர்கள். ஏனென்றால் இது அறிமுகமானது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், அது ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open) மாடல் ஆகும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான போது இது மெல்லியதாகவும், வேகமானதாகவும், சாம்சங் கேலக்ஸி போல்ட் மாடலை விட சிறந்த டிஸ்பிளேக்களை கொண்டிருந்தது. 2024, 2025 என தொடர்ச்சியாக அடுத்த மாடலுக்கு காத்திருந்த ரசிகர்களுக்கு 2026 ஆம் ஆண்டும் ஏமாற்றமே காத்திருக்கும் என்பது போல் தெரிகிறது.

என்ன சோனா முத்தா போச்சா. . OnePlus-ன் 1 லட்ச ரூபாய் போன்!

ஒன்பிளஸ் ஓப்பன் மாடலுக்கு அடுத்தபடியாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் ஓப்பன் 2 (OnePlus Open 2) ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீடு ரத்து செய்யப்பட்டுள்ளது தகவல் கிடைத்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உலகளவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த ஒன்பிளஸ் ஓப்பன் 2 ஸ்மார்ட்போன் ஆனது இந்த பிராண்டின் மிகப்பெரிய சம்மர் லான்ச் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் வழியாக கிடைத்துள்ள சமீபத்திய தகவல் ஒன்பிளஸ் ஓப்பன் 2 ஸ்மார்ட்போனின் அறிமுகம் "கேன்சல்" செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த திடீர் முடிவிற்கான காரணத்தை குறிப்பிடுவது கடினம். இருந்தாலும் ரேம் & ரோம் விலை நிர்ணயம் ஏற்கனவே பெரும்பாலான தயாரிப்புகளின் வெளியீடு மற்றும் விலையை பாதித்து உள்ளது, அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம்.

2203 இல் அறிமுகமான ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் ஒன்பிளஸ் ஓப்பன் ஆண்ட்ராய்டு 13 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ் அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 13.2 கொண்டு இயங்குகிறது. இது 1-120Hz டைனமிக் ரெப்ரெஷ் ரேட், 2268 x 2440 பிக்சல்ஸ் உடனான 7.82-இன்ச் 2கே Flexi-fluid LTPO 3.0 AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஒன்பிளஸ் ஓப்பனின் இன்னார் டிஸ்பிளேவாகும்.

வெளிப்புறத்தில் 10-120Hz டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் ரெஸ்பான்ஸ் ரேட் மற்றும் 2,800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடனான 6.31-இன்ச் (1116 x 2484 பிக்சல்ஸ்) 2கே LTPO 3.0 சூப்பர் ஃப்ளூயிட் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது, இந்த இரண்டு டிஸ்பிளேக்களுமே TÜV Rheinland Intelligent Eye Care சான்றிதழை பெற்றுள்ளன.

குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப் உடன் வரும் ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன் ஆனது 16GB LPDDR5x ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜை 4 ஜிபி, 8 ஜிபி மற்றும் 12 ஜிபி அளவில் விர்ச்சுவல் ரேம் ஆக பயன்படுத்திக்கொள்ள முடியும. கேமராக்களை பொறுத்தவரை, ஹசல்பிளாட் பிராண்டட் ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

இதில் 1/1.43-இன்ச் சோனி LYT-T808 "பிக்சல் ஸ்டேக்டு" CMOS சென்சார் கொண்ட 48-மெகாபிக்சல் மெயின் கேமரா உள்ளது. இது OIS மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (EIS), 85-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் ஒரு எப்/1.7 அபெர்க்ஷர் உடன் வருகிறது. ஒன்பிளஸ் ஓப்பனில் 64-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவும் உள்ளது. அது ஓஐஎஸ், இஐஎஸ், 33.4-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் எப்/2.6 அபெர்க்ஷர் உடன் கூடிய OmniVision OV64B சென்சார் உள்ளது.

மேலும் இது 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம் மற்றும் 120x டிஜிட்டல் ஜூம் வரை ஆதரிக்கிறது. மூன்றாவது கேமராவாக இது 48 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உள்ளது; இது மேக்ரோ கேமராவாகவும் வேலை செய்யும். இது இஐஎஸ் உடனான சோனி IMX581 சென்சார், 114-டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ மற்றும் எப்/2.2 அபெர்க்ஷர் உடன் வருகிறது.

ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் இன்னர் டிஸ்பிளேவில், இஐஎஸ் மற்றும் 91-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 20-மெகாபிக்சல் மெயின் கேமராவைப் பெறுவீர்கள். மேலும் இஐஎஸ், 88.5-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 32-மெகாபிக்சல் கேமராவும் உள்ளது. இது செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான கேமராக்களாக பயன்படும்.

512ஜிபி UFS 4.0 ஸ்டோரேஜுடன் வரும் ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனில் 5ஜி, 4ஜி LTE, வைஃபை 7, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யூஎஸ்பி 3.1 போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் உள்ளன. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் டூயல்-செல் 4,800mAh பேட்டரியை (3295 + 1510mAh) கொண்டுள்ளது. இது 67W SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதன் ரீடெயில் பாக்ஸில் 80W சார்ஜருடன் இடம்பெறும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Next Foldable Smartphone OnePlus Open 2 Launch Reportedly Cancelled
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X