Home
Mobile

இதுவரை வந்த எந்த ஒன்பிளஸ் போனிலும் இல்லாத ஒன்று.. OnePlus 12-ல் இருக்கும்.. Samsung, Apple-க்கு செக்மேட்!

முன்னர் வெளியான எந்தவொரு ஒன்பிளஸ் போனிலும் இல்லாத ஒரு விஷயம், கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள ஒன்பிளஸ் 12 (OnePlus 12) போனில் இடம்பெறும் என்பது போல் தெரிகிறது. மேலும் ஒன்பிளஸின் இந்த நடவடிக்கை ஆப்பிள், சாம்சங், கூகுள் போன்களுக்கு 'செக்மேட்' ஆகவும் இருக்கும்!

ஒன்பிளஸ் 12 போனில் அப்படி என்ன அம்சம் சேர்க்கப்படவுள்ளது? ஒன்பிளஸ் 11-ல் இடம்பெறுமென்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு.. கடைசி வரை வராமலேயே போன பெரிஸ்கோப் ஜூம் கேமராவானது (Periscope Zoom Camera) அடுத்து வரும் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 12 மாடலில் இடம்பெறும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை எந்த ஒன்பிளஸ் போனிலும் இல்லாத ஒன்று OnePlus 12-ல் இருக்கும்!

பெரிஸ்கோப் ஜூம் கேமராவானது ஒன்பிளஸ் போன்களில் உள்ள கேமராக்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய அப்கிரேட் ஆக இருக்கும். அதுமட்டுமின்றி சாம்சங்கின் பிளாக்ஷிப் போன்கள் (Samsung Flagship Phones) , ஆப்பிள் ஐபோன்கள் (Apple iPhones) மற்றும் கூகுள் பிக்சல் போன்களில் (Google Pixel Phones) உள்ள கேமராக்களுக்கு கடும் போட்டியாகவும் இருக்கும்.

ஏனென்றால், கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் போன்களில் 5எக்ஸ் ஆப்டிகல் ஜூமை (5x Optical Zoom) பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் சாம்சங் நிறுவனமானது அதன் பிளாக்ஷிப் போன்களான அல்ட்ரா (Ultra) மாடல்களில் 10எக்ஸ் டெலிஃபோட்டோ லென்ஸை (10x Telephoto Lens) பயன்படுத்துகிறது.

சுவாரசியமாக ஆப்பிள் நிறுவனம் கூட அதன் அடுத்த ஐபோன்களில் (Next iPhones) பெரிஸ்கோப் லென்ஸை அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதெல்லாம் மனதிற்கொண்டு தான் ஒன்பிளஸ் நிறுவனம் பெரிஸ்கோப் ஜூம் லென்ஸை தனது கையில் எடுத்துள்ளது போல் தெரிகிறது.

டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் சமீபத்திய அறிக்கையின்படி, ஒன்பிளஸ் அதன் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் பெரிஸ்கோப் கேமராவை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதுமட்டும் உண்மையாகும் பட்சத்தில், ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனானது சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் (Samsung Galaxy S24 series) மற்றும் ஐபோன் 15 மாடல்களுக்கு (iPhone 15 Models) கடும் போட்டியாக இருக்கும்,

ஏற்கனவே ஒன்பிளஸ் நிறுவனம், அதன் பயனர்களுக்கு ஒரு நல்ல கேமரா அனுபவத்தை வழங்குவதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டில் இருந்து ஹசல்பிளாட் (Hasselblad) உடன் கூட்டு சேர்ந்து பணியாற்றி வருகிறது. இதற்கிடையில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் இடம்பெறவுள்ள பெரிஸ்கோப் கேமராவானது ஒன்பிளஸ் பயனர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் நல்ல கேமரா அனுபவத்தை வழங்குமென்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஒன்பிளஸ் 12 எப்போது அறிமுகமாகும்? ஒன்பிளஸ் 12 சரியாக எப்போது அறிமுகமாகும் என்கிற தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இது வருகிற செப்டம்பரில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரிஸ்கோப் கேமராவை தவிர்த்து இது ஸ்னாப்டிராகன் ஜென் 3 ப்ராசஸர் (Snapdragon Gen 3 processor) உடன் வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஒருபக்கம் இருக்க இந்நிறுவனம் தனது முதல் போல்டபிள் ஸ்மார்ட்போனையும் (First Fodable Smartphone) அறிமுகம் செய்யவுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலின்படி இது வருகிற ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்படலாம். அதற்கு முன்னதாகவே பட்ஜெட் விலை ஸ்மாட்போனான ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி (OnePlus Nord 3 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Next Flagship Phone OnePlus 12 Will Get Big Camera Upgrade Finally Get Periscope Zoom Camera
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X